Thursday, 12 September 2013

Ram

விஜய் சேதுபதி இடத்தைப் பிடித்த ‘நேரம்’ ஹீரோ!

வரிசையாக பல மலையாள படங்கள் தமிழில் ரீ-மேக் ஆகிக் கொண்டிருக்க, ஒரு சில தமிழ் படங்களும் மலையாளத்தில் ரீ-மேக் ஆகி வருகிறது. அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ள படம் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து, மாபெரும் வெற்றி பெற்ற ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. தமிழில் பாலாஜி தரணீதரன் இயக்கிய இந்தப் படத்தை மலையாளத்தில் சுரேஷ் இயக்க இருக்கிறார். இவர் நடிகை அம்பிகாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி நடித்த ஹீரோ கேரக்டரில் மலையாளத்தில் ‘நேரம்’ புகழ் நிவின் போலி நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகி மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.