சென்ற ஆசிரியர் தினம்! பெங்களூரில் தான் படித்த காலத்தில் தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியை சாந்தம்மாவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! அப்போது ஆசிரியையின் நலன் குறித்து கேட்டறிந்த சூப்பர் ஸ்டாருக்கு அவர் பொருளாதாரா ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாக தெரிய வர, உடனே அவரது வங்கி கணக்கு எண் வாங்கி, அதில் 3 லட்சம் ரூபாய் செலுத்தியிருக்கிறார்.
இந்தத் தகவலை ஆசிரியை சாந்தம்மாவுக்கு தெரிவிக்க சந்தோஷ மிகுதியில் அதிர்ச்சி அடைந்து போயிருக்கிறார் அந்த 78 வயது முன்னாள் ஆசிரியை! இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை நினைவு கூர்ந்து அவர் பேசும்போது, ‘‘சிவாஜி ராவ் (ரஜினிகாந்த்) அப்போது ஏழை மாணவன். ஆனால் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தான், இப்போது பணம், புகழ் என பெரிய நிலையில் உச்சத்தில் இருந்தாலும், அவனுக்கு சின்ன வயசில் இருந்த அந்த நல்ல மனசு, இப்போதும் அவனிடம் இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.
’நன்றி’ என்றால் என்ன? என்று கேள்வி கேட்கும் இந்த காலகட்டத்தில் சுப்பர் ஸ்டாரை போன்ற நல்ல உள்ளம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பற்கு இது ஒரு உதாரணம்!