Saturday, 14 September 2013

Ram

ஹாலிவுட்டில் நடிக்கும் மாதவன்!

தமிழ், இந்திப் படங்களில் கலக்கிய மாதவன், இப்போது ஹாலிவுட்டில் நடிக்கப் போகிறார். 

அமீர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடித்த இந்திப் படம் '3 இடியட்ஸ்.' இந்தப் படம்தான் தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடிப்பில் 'நண்பன்' படமாக எடுக்கப்பட்டது. 

'3 இடியட்ஸ்' படத்தைப் பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் சைமன் வெஸ்டுக்கு மாதவனின் நடிப்பு ரொம்பவே பிடித்து விட்டதாம். 

ஏஞ்சலினா ஜூலி நடித்த 'டூம்ப் ரைடர்', சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் நடித்த 'எக்ஸ்பென்டபிள்ஸ்', நிக்கோலஸ் கேஜ் நடித்த 'கான் ஏர்' உள்ளிட்ட பல பிரபல படங்களைத் தயாரித்தவர் வெஸ்ட்.

எனவே, தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்குமாறு மாதவனுக்கு அழைப்பு விடுக்க, அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார்.

1968-ம் ஆண்டு வெளியான 'நைட் ஆஃப் தி லிவிங் டெட்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் தான் மாதவன் நடிக்கிறார். இது 3டி படமாகும். 

இந்தப் படத்தில் மாதவன் முன்னாள் கடற்படை அதிகாரியாக வருகிறாராம். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.