சென்னை: சகோதரர் ரஜினியால் வரமுடியவில்லை என்பதால் இந்த விழாவுக்கு நான் வந்தேன், என்னால் போக முடியாத விழாவுக்கு ரஜினி போவார், என்றார் கமல்ஹாஸன். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், ஜெயப்ரதா நடிக்க 1979-ஆம் ஆண்டு வெளியான படம் நினைத்தாலே இனிக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இந்தத் திரைப்படம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் வெளிவருகிறது. ராஜ் டிவி இந்தப் படத்தை வெளியிடுகிறது. இதற்காக கிட்டத்தட்ட 1 மாதத்துக்கும் மேல் புதுப்புது டிசைன்களில் தினமும் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது ராஜ் டிவி. டிஜிட்டலில் மாற்றப்பட்ட பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (13.09.13) காலை சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல் ஹாஸன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய டிரெய்லர் பற்றி பேசினார்கள். படத்தின் இன்னொரு நாயகன் ரஜினி வரவில்லை. இதுகுறித்து கமல் பேசுகையில், "சகோதரர் ரஜினி இங்கு வரமுடியவில்லை. அதனால் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னால் முடியாத விழாவிற்கு அவர் செல்வார். அவருக்காக நான் செல்வேன். நினைத்தாலே இனிக்கும் படத்தில் எங்கள் இருவருக்கும் கிடைத்த அனுபவம் அற்புதமானது. யாருக்கும் கிடைக்காதது. அவையெல்லாம் இப்போது மீண்டும் வந்து போகின்றன...", என்றார்.
Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/i-attend-this-event-instead-rajini-says-kamal-183346.html
Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/i-attend-this-event-instead-rajini-says-kamal-183346.html