Saturday, 14 September 2013

Ram

ஸ்ரீதிவ்யாவின் தமிழ் ஆசிரியர் யார்?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், பட நாயகி ஸ்ரீதிவ்யாவை, எந்நேரமும் அவரது தாய்குலம் ஒட்டிக் கொண்டே இருந்ததால், ஸ்ரீதிவ்யாவிடம் ஜாலியாக நாலு வார்த்தை பேச கூட முடியவில்லை என்று ரொம்பவே பீல்  செய்தார் சிவகார்த்திகேயன். ஆனால், இப்போது ஸ்ரீதிவ்யா விடுத்துள்ள செய்தியில், அப் படத்தில் பாவாடை தாவணி அணிந்து, கிராமத்து கெட்டப்பில் நடித்தது சந்தோஷமாக  இருந்தது. என்னை மாடர்ன் டிரஸ்சில் பார்த்தவர்கள், நான், கிராமத்து கெட்டப்புக்கு மாறியதும், இப்போதுதான், நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று வர்ணித்தனர். அதிலும் சிவகார்த்திகேயன், ஊதா கலரு ரிப்பன் பாடலை அடிக்கடி பாடி, என்னை கிண்டல் செய்து கொண்டேயிருந்தார். மேலும், தெலுங்கு பெண்ணான எனக்கு, தமிழ் கற்றுக்  கொடுத்ததே அவர் தான். நடிப்பிலும், நிறைய உதவி செய்தார்என்று புகழ்கிறார் ஸ்ரீதிவ்யா.