Thursday, 12 September 2013

Ram

பிரபு சாலமனின் புதிய படம் கயல் - பிரஸ்மீட் படங்கள்

கும்கி படத்துக்குப் பிறகு பிரபு சாலமன் கயல் என்ற படத்தை இயக்குகிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். மைனா படத்துக்குப் பிறகு முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார் பிரபுசாலமன். அவரின் கும்கி மைனாவைப் போலவே காதல் கதைதான்.





மலையோர கிராமம், காட்டு யானை என்ற பின்னணி மட்டுமே படத்தை வித்தியாசப்படுத்தியது. புதிய படம் கயலும் காதல் கதைதானாம். இந்தமுறை மலையோரத்துக்குப் பதில் கடலை பின்னணியாக எடுத்திருக்கிறார்.

புதுமுகங்கள் பிரதான வேடங்களில் நடிக்கிறார்கள். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முந்தையப் படங்களைப் போலவே டி.இமானை இசையமைப்பாளராக்கியிருக்கிறார். ஆறு பாடல்களில் ஐந்து பாடல்களின் கம்போஸிங் முடிந்துள்ளது. யுகபாரதி அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார். 



குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு, எடிட்டர் சாமுவேல், வைர பாலன் கலை இயக்கம். வரும் 13 ஆம் தேதி பொன்னேரியில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். நாகர்கோவில், மைசூர், சென்னை, மேகலாயா, லடாக் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.



இந்தமுறை படத்தின் பின்னணி மட்டுமின்றி கதையும் கவரக் கூடியதாக இருக்கும் என நம்புவோம்.