Saturday, 14 September 2013

Ram

மணிரத்னம் இயக்கும் புதிய படம்!

மணிரத்னம் கடைசியாக இயக்கிய 'ராவணன்', 'கடல்' இரண்டு படங்களுமே தோல்வியைச் சந்தித்தன.

அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா நடித்த 'குரு' இந்திப் படம் தான் கடைசியாக மணிரத்னம் கொடுத்த ஹிட். 

இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவியதால், அடுத்து கண்டிப்பாக ஹிட் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மணிரத்னம்.

இதற்காக மும்முரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். எல்லாமே பர்ஃபெக்‌ஷனாக வரவேண்டும் என்பதால், ஓய்வுக்கு விடைகொடுத்துவிட்டு பம்பரமாகச் சுழன்று வருகிறாராம்.

ஆனால், அவர் இயக்கப் போவது தமிழ்ப் படமல்ல. கடைசியாக தமிழில் எடுத்த இரண்டு படங்களுமே ஓடாததால், இந்திப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.