Saturday 14 September 2013

Ram

முதல்வர் பங்கேற்கும் சினிமா நூற்றாண்டு விழா.. விஜய்க்கு உண்டா அழைப்பு?



சென்னை: முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடக்கும் இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நடிகர் விஜய்க்கு அழைப்பு வைப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர் விழாக் குழுவினர். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் 21-ம் தேதி முதல்   24-ம் தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது.


இந்த விழாவில் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே பங்கேற்கிறது. விழா நடப்பது சென்னையில் என்பதால் தென்மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து முதல்வர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்தியத் திரையுலகின் ஜாம்பவான்கள் ரஜினி, கமல், பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் என அனைவருமே திரண்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளது பிலிம்சேம்பர். இந்த நாட்களில் திரையுலகப் பணிகள் நிறுத்தப்படுகின்றன
.


விழாவில் கலந்து கொள்ள வருமாறு அனைவருக்கும் பிலிம்சேம்பர் அழைப்பு அனுப்பி வருகிறது. இதற்காக தனி குழு அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அழைப்புகள் அனுப்பி வருகின்றனர்
.

எந்தக் கட்சியோ, விருப்பு வெறுப்போ இல்லாமல் நடக்கும் பொதுவான விழா என்பதால் இதில் பங்கேற்க எந்த கலைஞருக்கும் தடை இல்லைதான் என்றாலும், விழா நடப்பது முழுக்க முழுக்க முதல்வர் அலுவலகத்தின் வழிகாட்டுதலால் என்பதால், யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும், கூடாது என்பதை அவர்களிடம் கேட்டுக் கொண்டே முடிவு செய்கின்றனர்.

அந்த வகையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கு அழைப்பு அனுப்புவதில் விழாக்குழு தயக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் தலைவா படத்துக்கு முன்பும், அதன் பின்பும் விஜய் மற்றும் அவர் தந்தை ஆகியோர் ஆட்சி மேலிடத்தின் கோபத்துக்கு ஆளாகியிருப்பதால் இவர்களை அழைப்பது சரியாக இருக்குமா என யோசிக்கிறார்கள் விழா குழுவினர். அழைப்பிதழை மட்டும் கொடுத்துவிட்டு, விழாவுக்கு வரவேண்டாம் என கூறி தவிர்த்துவிடலாமா என்றும் யோசித்து வருகிறார்களாம். 

Source: http://tamil.oneindia.in/movies/news/film-chamber-not-inviting-vijay-cm-function-183358.html#slide327731