அஜீத், சூர்யா படங்களை விட விஜய்யின் படம் அதிக விலைக்கு போய்யுள்ளது. ரஜினிக்குப் பிறகு தமிழ் திரையுலகில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படும் நடிகர் விஜய்.
அந்த அளவுக்கு இவருடைய படங்களுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்ப்பு இருக்கும். இதற்கு சமீபத்தில் வெளியான தலைவா படம் நல்ல உதாரணம் என்று சொல்லலாம். குறிப்பிட்ட தேதியை கடந்து வந்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்ப்பு.
இந்நிலையில் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா நான்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் சாட்லைட் வியாபாரம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய்க்குதான் முதல் இடம். விஜய்யின் ‘தலைவா’ படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் 15 கோடி கொடுத்து வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில்தான் அஜீத்தின் ‘வீர்ம் படம். அதாவது இப்படம் 13 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
அதேசமயம் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் படம், விஜய் படத்துக்கு இணையான தொகைக்கு விலை பேசப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ மற்றும் ‘பிரியாணி’ படங்கள் தலா 11 ½ கோடிக்கு விலை போய்யுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.