இது கதிர்வேலன் காதல் படத்தின் டிரைலர் அக்டோபர் 11ம் தேதி வெளியாக உள்ளது.
ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு உதயநிதி நடிக்கும் படம்தான் இது கதிர்வேலன் காதல். படத்தில் உதயநிதியோடு நயன்தாரா மற்றும் சந்தானமும் இருக்கிறார். இதுவும் தவிர சுந்தரபாண்டியன் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் தான் படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
அதேசமயம் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் படம்தான் வணக்கம் சென்னை. இதில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர். சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வருகிறது.
எனவே, வணக்கம் சென்னை திரைப்படம் வெளியாகப் போகும் அதே நாளில் இது கதிர்வேலன் காதல் படத்தின் டிரைலரையும் வெளியிட முடிவு செய்துள்ளனர். காரணம், இவ்விரு படங்களையும் தயாரிப்பவர் உதயநிதி.