அனேகன் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது.
தனுஷ் - கே.வி.ஆனந்த் முதன்முறையாக இணைந்திருக்கும் படம் அனேகன். இதில் தனுஷ் மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மும்பையைச் சேர்ந்த அமிரா அறிமுகமாகிறார். படத்தில் 80களில் வரும் நாயகிகள் கெட்டப்பில் அமிரா நடிக்கிறார். இவர்களுடன் கார்த்திக், அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்நிலையில் அனேகன் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது. இங்கு தனுஷ் - அமிரா சம்மந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகள் படமாக்கப்பட்டது. புதுச்சேரியில் முதற்கட்ட படப்பிடிப்பு 8 நாட்கள் நடைபெறுகிறது. கே.வி.ஆனந்துக்கே உரிய கமர்ஷியல் பாணியில் இப்படம் உருவாகியது.
இந்தப் படத்தில் நடித்தபடியே தனுஷ் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கும் 'வேலையில்லா பட்டதாரி' படத்திலும் நடிக்கிறார்.