Saturday, 14 September 2013

Ram

தலகனம் இல்லாத 'தல', 'தளபதி': நெகிழும் தயாநிதி அழகிரி

சென்னை: அஜீத் குமாரும், விஜய்யும் தலைகனம் இல்லாதவர்கள் என்று தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது

தல அஜீத், இளைய தளபதி விஜய் ஆகிய இருவருமே அடுத்தடுத்து வெற்றிகளை ஈட்டி வருகின்றனர். அவர்கள் இருவரையும் அருகில் இருந்து பார்த்து வருகிறேன். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவர்கள் தலைகனம் இல்லாமல் முன்பு போன்றே பழகுகிறார்கள். இனி வரும் காலங்களிலும் அவர்கள் தொடர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அஜீத் குமார் நடித்த மங்காத்தா படத்தை தயாரித்தவர் தயாநிதி அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. விஜய்யின் ஜில்லா தீபாவளி கழித்து வெளியாகும் என்று தெரிகிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/ajith-vijay-are-down-earth-persons-183154.html