Saturday, 14 September 2013

Ram

5 கோடி சம்பளம் கேட்கிறாரா சிவகார்த்திகேயன்?

பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' படத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். 'மெரினா' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார். 

'3' படத்தில் நடித்தபோது தனுஷும், சிவகார்த்திகேயனும் நண்பர்கள் ஆனார்கள். அந்த சமயத்தில் உருவான நட்பு இப்போதும் பெரிதாகப் பேசப்படுகிறது. 'என் தம்பி சிவகார்த்திகேயன்' என்று தனுஷ் பெருமையாக சொல்லிக்கொண்டிருக்கிறார். 

அதனாலேயே தன் தயாரிப்பில் உருவான 'எதிர்நீச்சல்' படத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கினார். அந்தப் படத்துக்காக குறிப்பிட்ட சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் நடித்ததற்காக கோடி ரூபாய் சம்பளத்தைத் தொட்டாராம்.  

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'  படத்துக்காக ரெண்டு கோடி சம்பளம் வாங்கினாராம்.  படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை இன்னும் அதிகரித்துவிட்டது. 7 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதால், தற்போது   தன் சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டாராம் சிவகார்த்திகேயன். 

இதனால் ஸ்கிரிப்ட்டோடு சிவகார்த்திகேயனை நெருங்க நினைத்த உதவி இயக்குநர்கள் இப்போது தயங்கித் தயங்கி நிற்கிறார்களாம்.