விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது கணக்கை நேர் செய்ய விரும்பினார். இதனால் தீபாவளிக்குக் காவலனைத் திரைக்குக் கொண்டுவந்துவிடுவது என்று முடிவு செய்தே படத்தை ஆரம்பித்தார்கள். ஆனால் எந்திரன் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டத்தில் இப்போது கில்லி ஹீரோவும் தனது படத்தை டிசம்பருக்குத் தள்ளி வைத்திருக்கிறார்.
இதேபோல் கமல் படமும் எந்திரனால் தள்ளி வைக்கப்பட்டிருகிறது. கமலின் மன்மதன் அம்பு திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. தீபாவளிக்குப் படம் வெளியாவது உறுதி என்று இயக்குனர் தரப்பில் சொல்லிவந்தார்கள். கமலும் இப்போது மன்மதன் படத்துக்கு டப்பிங் பேசிவருகிறார். ஆனால் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் நவம்பரில்தான் முடியும்; தீபாவளி ரேஸில் மன்மதன் இல்லை என்று சொல்லிவிட்டாராம் இயக்குனர் ரவிக்குமார்.
ஆர்யா சார்பில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுகொண்டதற்கு ஏற்ப எந்திரன் வெளியீட்டை ஒரு வாரம் தள்ளி வைத்த சன் பிக்ஸர்ஸ், மன்மதனை டிசம்பர் கடைசி வாரம்தான் வெளியிட வேண்டும் என்று சொல்லிவிட்டதாம்.