ஆடுகளம் இசை வெளியீட்டு விழாவில் இரண்டுபேர் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது். ஒருவர் நடிகர் சூர்யா. மற்றொருவர் இயக்குனர் ஷங்கர். சூர்யா பேசும்போது “நான் தனுஷ் ரசிகன்… அவர் இயக்குனர்களின் நடிகர்” என்று ஈகோ இல்லாமல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
விழாவில் ஷங்கர் பேசியதாவது :
“விரைவில் தனுஷை இயக்குவேன். அவருக்கான ஸ்கிரிப்ட் ரெடியானதும் எனது படத்தில் நடிப்பார்” என்று மேடையிலேயே அறிவித்தார். இதற்காக இயக்குனர் ஷங்கரை அவரது அலுவலகத்தில் சந்தித்து நன்றி சொல்லியிருக்கிறாராம் தனுஷ்.
உண்மையில் தனுஷை நீங்கள் இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது சூப்பர் ஸ்டார் ரஜினியாம். எந்திரனை இயக்கியதன் மூலம் இந்தியாவின் நம்பர்-1 வெற்றிப்பட இயக்குனராக உருவாகியிருக்கிறார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.