சிம்பு இப்போது இலண்டனில் போடாபோடி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். விரைவில் நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் வேட்டை ஆரம்பம் படத்தைத் தொடங்கவிருக்கிறார்களாம்.
இதற்கிடையில் போடாபோடி படத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த அப்படத்தைத் தயாரிக்கும் ஜெமினி லேப் நிறுவனத்தினர் சிம்பு மீது கடும் கோபம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதற்கிடையில் போடாபோடி படத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்த அப்படத்தைத் தயாரிக்கும் ஜெமினி லேப் நிறுவனத்தினர் சிம்பு மீது கடும் கோபம் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
சென்னையைப் போலவே படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாக வருவது, மிக அதிக வாடகை உள்ள விடுதியில்தான் தங்குவேன் என்று அடம்பிடித்துத் தங்கியது என்று ஒவ்வொன்றிலும் செலவுகளை அதிகரித்துக் கொண்டே போய்விட்டாராம். தனித் தனியாகச் செய்த போது பெரிதாகத் தெரியாமல் எல்லாச் செலவுகளையும் செய்து விட்டார்கள்.
ஒட்டுமொத்தமாகக் கணக்குப் பார்த்த போதுதான் சிம்பு செய்த வீண் செலவுகள் தெரிய வந்ததாம். இதனால் அடுத்தகட்டப் படப்பிடிப்பின் போது அதிரடியாக நடந்து கொள்வது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அண்மைக்காலமாக இதுமாதிரிக் குற்றச்சாட்டுகள் வராமல் நல்லபிள்ளை போல நடந்து கொண்டிருந்தார் சிம்பு. இப்போது இலண்டன் போய் பழைய மாதிரியே நடந்து கொண்டிருக்கிறார்.
மறுபடி ஓரிருபடங்கள் தோல்வியடைந்தால் தான் அமைதியாவார் என்கிறார்கள். இதற்கிடையே இலண்டன் சென்று வந்தவர்கள் மூலம் ஒரு தகவல் கசிகிறது.
அது, ஹோட்டல் ஒன்றில் சிம்பு குடித்துவிட்டுத் தகராறு செய்ததாகவும் அதனால் அங்கு அவரைச் செமத்தியாக அடித்து உதைத்தாகவும் பேசிக் கொள்கிறார்களாம்.
சர்ச்சைகள்தாம் சிம்புவின் அடையாளம் போலும்.அது இல்லாமல் அவரைப்பற்றிய செய்திகளே இல்லை. இப்படியும் இருக்கிறார்கள்.