Wednesday, 1 December 2010

Sudharsan SR

விஜய்யின் காவலன் படத்தை திரையிட உயர்நீதிமன்றம் தடை

 



நடிகர் விஜய் நடித்துள்ள காவலன் படத்தை 6 வார காலத்திற்கு வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த சந்திரா இன்கார்பரேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 
Vijay and Asin



நடிகர் விஜய்- அசின் நடித்த காவலன் படத்தை ஏகவனூர் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ரொமேஷ்பாபு தயாரித்துள்ளார். டைரக்டர் சித்திக் இயக்கி உள்ளார். வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.

டத்தை அடுத்த மாதம் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரொமேஷ்பாபுவிடம் இருந்து ரூ.5.50 கோடிக்கு வாங்கினேன். இதற்கான ஒப்பந்தம் 29-9-2010 அன்று போடப்பட்டது. இதுவரை நான் ரூ. ஒன்றரை கோடியை முன்பணமாக கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமையை உரிமையாளர் ரொமேஷ்பாபு சினிமா பாரடைஸ் நிறுவன உரிமையாளர் சக்தி சிதம்பரத்துக்கு விற்றுள்ளார்.

இதுபற்றி நான் சக்திசிதம்பரம் மற்றும் இப்படத்தை பிரின்ட் செய்யும் கலர் லேப்புக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். மேலும் தயாரிப்பாளரிடம், கலர் லேப்பிடம் இருந்து வெளிநாட்டு உரிமை எனக்கு வழங்கியதற்கான கடிதம் வாங்கி தரும்படி வலியுறுத்தினேன்.

அதற்கு அவர் இனி என்னிடம் கலர் லேப் கடிதம் கேட்டால் வெளிநாட்டு உரிமைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

நான் தயாரிப்பாளரிடம் மீதி தொகையை கொடுக்கும் போது கலர்லேப் என்னிடம் காவலன் பட பிரின்டை ஒப்படைக்க வேண்டும். வேறு யாருக்கும் பிரின்ட் கொடுக்க கூடாது என தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு உரிமையை வேறு யாருக்கும் கொடுப்பதற்கும், படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜேஷ்வர், படத்தை 6 வாரத்திற்கு வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, விநியோகஸ்தர் சக்திசிதம்பரம், கலர் லேப் நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.