Sunday, 21 November 2010

Sudharsan SR

மங்காத்தா - அ‌‌ஜீத்தின் பிளான்

 

மங்காத்தாவின் ப்ரமோ பாடலை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்கின்ற செய்திகள்.




ச‌ரி, மங்காத்தா எப்போது ‌ரிலீஸ்? அதற்கும் ஒரு பிளான் வைத்திருக்கிறார் அ‌‌ஜீத்.

நிக் ஆர்ட்ஸில் படம் பண்ணும் போது அ‌‌ஜீத்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி கண்டிப்பாக அ‌‌ஜீத்தின் படம் வெளியாகும். சில வருடங்களாக இந்த வழக்கம் தவறிப் போய்விட்டது. 

மங்காத்தாவை தனது பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார் அ‌‌ஜீத். அ‌‌ஜீத் ரசிகர்களுக்கு இதைவிட நல்ல செய்தி இருக்க முடியாது.

மங்காத்தா முடிந்ததும் பில்லா இரண்டாம் பாகத்தில் அ‌‌ஜீத் நடிக்கிறார்.