Thursday, 18 November 2010

Sudharsan SR

இரண்டு ‘வுட்’களிலும் அசின்

 

எங்கு எதை செய்தால் என்ன நடக்கும் என நன்கு அறிந்துள்ள அசின், திட்டமிட்டு காய் நகர்த்துவதில் வல்லவர். கோலிவுட், பாலிவுட் என இரண்டு ‘வுட்’களிலும் தனிப்பெரும் ராணியாக வலம் வர விரும்பிய அசின், அதற்கு தகுந்த ‘ஆட்களையும், சரியாக பிடித்துள்ளார்.
சல்மான்கானுடன் அசின் நடித்த ‘ரெடி’ தமிழ்நாட்டில் அவரை பெரிய அளவில் கால் தடுக்கி விழச் செய்ய, சுதாரித்துக்கொண்ட அசின் ‘விஜயை’ இறுக்கமாக பற்றிக்கொண்டார். விஜயின் படத்தை எக்காரத்தை முன்னிட்டும் தமிழ்நாட்டில் யாரும் தடை செய்ய துணிய மாட்டார்கள் என்பதை நன்கு உணர்ந்த அசின், விஜயுடன் ‘காவலனில்’ சேர்ந்து விட்டார்.
‘காவலன்’ படத்திற்காக ‘லவசா குன்றில்’ விஜயுடன் ஒரு ‘மசாலா’ பாடலுக்கு ஆட்டம் போட்ட அசின், அதை முடித்த கையோடு சல்மானுடன் ‘ரெடி’ படத்திற்காக ஒரு ‘மசாலா’ காட்சியிலும் நடித்தாராம். இவ்வாறு அடுத்தடுத்து இரண்டு ‘மசாலா’ காட்சிகளில் நடித்த போதும் அசின் எந்தவித தயக்கமும் காட்டவில்லையாம்.