Thursday, 18 November 2010

Sudharsan SR

கமலைத் தொடரும் அஜித், விஜய்

 

தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள். இன்றைய இளம் ஹீரோக்கள் தங்கள் படங்களில் வேறொரு ஹீரோ நடிப்பதை அனுமதிக்க மறுப்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாலிவுட், மல்லுவுட்டைப் போல மூத்த நடிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை.
தமிழ் சினிமாவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது கூறுவதுடன், தனது படங்களில் இளம் நடிகர்களையும் இணைத்து நடிக்க வைப்பார். பஞ்சதந்திரம், தெனாலியில் ஜெயராம், அன்பேசிவம் படத்தில் மாதவன், காதலா காதலாவில் பிரபுதேவா, குருதிப்புனலில் அர்ஜூன் என சக கலைஞர்களை நடிக்க வைத்தார். தற்போது அவர் நடித்து வரும் மன்மதன் அம்புவில் கூட மாதவன் இருக்கிறார்.
இப்போது கமல்ஹாசன் பாலிஸியை பின்பற்ற தயாராகியிருக்கிறார்கள் நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் ஆகியோர். டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் 3 இடியட்ஸ் படத்தில்தான் இந்த மூன்று நட்சத்திரங்களும் இணைகின்றன. இந்த படத்துக்காக முதல் பாடல் கம்போஸிங் முடிந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். டிசம்பர் 6ம்‌தேதி படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளது.
இதே போல் அஜித்தும் மங்காத்தாவில் அர்ஜூன் மற்றும் சில ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஷூட்டிங்க் ஆரம்பிக்கப்பட்டு நடந்துவருகிறது. அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு வர இருக்கிறது.