Sunday, 17 October 2010

Sudharsan SR

விஜய்யின் காவலன் சாதனை-ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியீடு!

 

இளைய தளபதி விஜய், அசின், வடிவேலு, ராஜ்கிரண், ரோஜா ஆகியோர் நடித்துவரும் படம் காவலன். இது சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 2-வது படம். அசின் நடித்துள்ளதால் விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்தது அனைவரும் அறிந்ததே.


காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்.

மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.

தமிழகத்தில் “காவலன்” படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ரெட்ஜெயன்ட் மூவிஸ் மிகப்பெரிய தொகைக்கு காவலனை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

டிசம்பர் 24-ல் “காவலன்” தரிசனம்!