இது வரைக்கும் தமிழ் சினிமாவுல 6 படத்துக்கு ஒரே நேரத்துல ஹீரோவா நடிக்கிறது நம்ம இளையதளபதியாதான் இருப்பார். காவலன்ல அசின் கொடுத்த கேப்ப பில் பண்ண வேலாயுதம் ஒத்துகிட்டாராம், அதுக்கு அடுத்து, 3 இடியட்ஸ் இதுக்கு என்ன பேர் வைப்பாங்கன்னு கூடதெரியல 3 இடியட்ஸ் தமிழ்னு வச்சுக்கலாம் நாங்க ரெக்கமண்ட் பண்றோம்.3 இடியட்ஸை ஷங்கர் டைரக்ட் பண்ன போறாராம், இலியானா, ஜீவா, சித்தார்த் கூட நம்ம தளபதி நடிப்பார்ன்னு சொல்லிக்கிறாங்க. பட் இன்னும் ஷங்கர் சொல்லல, ஜெமினி பிலிம் ஷர்க்கூட்ஸ் சொல்லல.அதுக்கு அடுத்து பகலவன், பாவம் டைரக்டர் சீமான் அவருக்கு இருக்கிற பிரச்சனைல இந்த பிரச்சனைய வச்சு ஒரு படம் பண்ணி கொடுங்கன்னு நம்ம தயாரிப்பாளர் தாணு நடையா நடக்கிறார். அவர் கேஸ் 24 ம் தேதி கோர்ட்க்கு வருது பார்க்கலாம். படம் வருமான்னு?
அடுத்து சற்குணம் படமாம், அதற்கு அடுத்து விக்ரம் கே குமார் படமாம்… அப்புறம் கே.எஸ் ரவிக்குமார் படம், மதராஸபட்டினம் விஜய் படம், மணிரத்னம் படம், பன்சாலி படம், ஸ்பீல் பெர்க் படம், ஜேம்ஸ் காமரூன் படம் எல்லாமே செய்வார் நம்ம இளைய தளபதி.
சரி அவர் என்னவோ செய்யட்டும், அவர் கைவசம் இப்போதைக்கு இருக்கும் படம் காவலனும், வேலாயுதமும் மட்டுமே. அவர் காவலனுக்கு கதையை மலையாளப்படமான பாடிகார்ட் கிட்ட இருந்தும், படத்துக்கு தலைப்பை நம்ம பசு நேசன் ராமராஜன் கிட்ட இருந்தும் வாங்கியது குறிப்பிட தக்கது. இந்த படத்தில் வடிவேல் இருப்பதால் படம் நல்லா இருக்கும்னு நாங்களும் நம்புறோம்.(நம்பிக்கைதான் வாழ்க்கை)
அடுத்த படம் வேலாயுதம் இது தெலுங்கு ஆஸாத்துன்னு ரீமேக் கிங் ” ராஜாவே சொல்லிட்டார். அவரோட கடைசி ரீமேக் தில்லாங்கடி டகால்டி ஆனதால கொஞ்சம் பயத்துடன் உற்று நோக்கவேண்டியதாக உள்ளது.
இதற்கிடையே தளபதி காவலனின் இறுதிகட்ட பணியில் இருப்பதால் அவர் வேறு எதைப்பத்தியும் வாயே திறக்க மாட்டேங்கறார். 2 நாட்களாக வளசரவாக்கத்தில் காவலன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மீடியாக்கள் அவரை அணுகி 3 இடியட்ஸ், பகலவன் சம்பந்தமான கேள்விகளை எழுப்ப… ங்ணா… அது இப்போ வேணாங்ணா… அப்படின்னு தளபதி நழுவிட்டார்.
டோண்ட் ஒர்ரி… உங்களை ஊக்கு விக்க தளபதியின் காவலன் கண்டீப்பாக டிசம்பரில் திரைக்கு வருவான். (அதுக்கு அசின் என்ன குடைச்சல் தருவாங்களோ). ரெட் ஜெயண்ட் வாங்கும் என்று தெரிவதால் பிரச்சனை எதும் இல்லாமல் வரும் என்று நிச்சயமாக நம்பலாம்…