அ.தி.மு.கவில் அஜீத்? ஆயிரம் கேள்விகளை உள்ளடக்கிய இந்த தலைப்பும் முன்னணி புலனாய்வு இதழில் வெளிவந்திருக்கும் இந்த செய்தியும் இந்நேரம் தமிழ்நாட்டையே கதி கலங்க வைத்திருக்கும். அஜீத் ஒரு சைக்கிள் வாங்கி அதில் யானையை உட்கார வைத்து சவாரி அடிச்சாருன்னு சொன்னா கூட நம்பிடலாம். ஒரு அரசியல் கட்சியில் சேர்கிறார் என்பதை எப்படி நம்ப முடியும் என்கிறார்கள் அவரது மூட் அறிந்த திரையுலக பிரபலங்கள் சிலர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் முன்னாள் அதிமுக அமைச்சர் சைதை துரைசாமி இல்ல திருமண விழாவுக்கு வந்திருந்த அஜீத், அங்கு வந்திருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அவரது காலில் விழுந்தும் வணங்கினார். அவ்வளவு பரபரப்பில் இருவரும் சந்தித்துக் கொண்டது சில நிமிடங்கள் கூட இல்லை. அதே விழாவுக்கு வந்திருந்த விஜய்யும் அடுத்தடுத்த சில நிமிடங்களில் ஜெயலலிதாவை சந்தித்து காலில் விழுந்து வணங்கினார். ஆனால் விஜய்யை விட்டு விட்டு அஜீத்தை பிடித்துக் கொண்டது அரசியல்.
அஜீத் அதிமுக பக்கம் போவாரா? அல்லது வேறு ஏதாவது எண்ணம் இருக்கிறதா? நாம் கோடம்பாக்கத்தில் புகுந்து விசாரித்த வகையில் நமக்கு கிடைத்த தகவல்கள் மேலும் அதிர்ச்சியையே ஏற்படுத்தின. உண்மையில் அவரை கட்சியில் சேரச்சொல்லி வற்புறுத்திக் கொண்டிருப்பது அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்தானாம். ராகுலின் து£துவர்களாக சிலர் அஜீத்தை சந்தித்ததாகவும் தகவல்கள் கசிகின்றன.
அதிமுகவில் இருந்தும் அவருக்கு அழைப்பு வந்ததை மறுக்கவும் முடியாது. ஆனால் அஜீத் இப்போதைக்கு அரசியலில் நுழைய ஆர்வம் காட்டவில்லை என்கிறது நமக்கு கிடைத்த தகவல். என்றாலும் நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? அதிமுகவோ, காங்கிரசோ, அல்லது தனிக்கட்சியோ.... காலமும் சூழ்நிலைகளும்தான் அதை முடிவு செய்ய வேண்டும்!
1 comments:
Write commentsPLEASE NO POLITICS AJITH SIR
Reply