காவலன் படத்தில் வரலாறு காணாத கெட்டப் மாற்றி இருக்கிறார் விஜய். இவருக்கு போட்டியாக இப்போது களம் இறங்க உள்ளார் தல அஜித்.. அவரும் மங்காத்தாவில் மாறுவேடம் போடுகிறாராம்..(விஜய் என்ன கெட்டப் மாத்துனாலும் பில்டப்பை நிறுத்தபோறது இல்ல, அஜித் கெட்டப் மாத்தினாலும் கேட் வாக் நிறுத்தப்போறது இல்ல)
“மங்காத்தா” படத்தின் தொடக்க வேலைகள் முடிந்துவிட்டன. இனி ஷூட்டிங்கை தீவிரமாய் முடிப்பதுதான் பாக்கி. படத்தின் இறுதி கட்ட கதை வடிவத்தில் ரொம்பவே சந்தோஷத்தில் இருக்கிறாராம் அஜீத். படத்திற்கு வேறு ஒரு புதிய ஸ்டைலில் அஜீத் இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு சில ஐடியாவும் கொடுத்தாராம் இயக்குனர் வெங்கட்பிரபு.
ஆனால், தல அஜீத் தன் தனி ஸ்டைலில் வருவதாகவும் அந்த ஸ்டைலை வெங்கட்பிரபுவுக்குகூட முதல்நாள் ஸூட்டிங்கின்போதுதான் காட்டப்போவதாகவும் கூறியிருக்கிறாராம்
இதற்கிடையில் படத்தின் மொத்த யூனிட்டும் அக்டோபர் 20-ல் ஐதரபாத்திற்கு பயணப்பட உள்ளனர். இன்னும் யார் யார் நாயகிகள் என்று தேர்வாகாத இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். சக்தி சரவணன் கேமரா பார்க்கிறார். கே.எஸ்.பிரவீனும், என்.ஸ்ரீகாந்தும் படத்தொகுப்பை பார்க்கிறார்கள்.
படத்தின் டிரெய்லரே அஜீத் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்திருக்கும் நிலை, அஜீத்தின் புதிய ஆவதாரம் எப்படியிருக்கும் என்பது இன்னும் ஆவலை கூ்ட்டியிருக்கிறது. ஆனால் அஜீத்தை இன்னும் சில மாதங்களுக்கு வெளியில் எங்கும் பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை
Tuesday, 28 September 2010
விஜய்க்கு போட்டியாக கெட்டப் மாற்றும் அஜித்
Sudharsan SR
22:07:00
Post a Comment