Monday, 27 September 2010

Sudharsan SR

ஆர்யா - சூர்யா…!

 

கொஞ்ச நாள் முன்னாடி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா ஆர்யா பற்றி :




பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த சூர்யாவை வரவேற்ற பலரும், 'சிங்கம் சூர்யா' என்றே அழைத்தார்கள் அவரை. தனது உரையில் "எல்லாரும் சிங்கம் சூர்யான்னு சொல்றது பயமா இருக்கு" என்ற சூர்யா பக்கத்திலிருந்த முருகதாசிடம், "சார். நம்ம படத்தை சீக்கிரம் முடிச்சு ரிலீஸ் பண்ணிடலாம் சார்" என்றார். தொடர்ந்து, "இந்த பட விழாவுக்கு நயன்தாரா வந்திருவாங்களோ என்று பயந்தேன். நல்லவேளை வரல. ஏன்னா நாங்க இரண்டு பேரும் சேர்ந்து நடிச்ச படத்தின் ஆடியோ ரிலீசுக்கும் அவங்க வரல. இப்பதான் நிம்மதியா இருக்கு" என்றார். அப்படியே நயன்தாராவையும் விட்டுக் கொடுக்காமல், "ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்களுக்கு போகக் கூடாது என்பதை அவங்க ஒரு பாலிசியாகவே வச்சுருக்காங்க. அதுதான் அவங்க வராததற்கு காரணம்" என்றார்.
இந்த விழாவுக்கு வந்திருப்பவர்களில் எனக்கு பிடிக்காத ஒருவரும் இருக்கார். அவர் யாருன்னு கடைசியா சொல்றேன் என்று சஸ்பென்ஸ் வைத்த சூர்யா, கடைசியில் சொன்னது ஆர்யாவைதான். ஏன்?
"எங்க வீட்டில எல்லாரும் டி.வி பார்த்துட்டு இருக்கும்போது ஆர்யா சீன் வந்தா, இந்த பையன் நல்லாயிருக்கான். அழகாயிருக்கான்னு சொல்வாங்க. அதனாலயே எனக்கு அவரை பிடிக்காது" என்றார்