Monday, 27 September 2010

Sudharsan SR

ஒரு காமடியனும் இன்ன பிற காமெடியர்களும்

 



வடிவேலு: தம்பி இன்னிள இருந்து நான் கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நீ ஆரம்பிச்சா முதல்வர் ஆக பத்து வருஷம், எனக்கு அஞ்சே வருஷம்....


விஜய்: கூட நடிகிரயேனு பாக்குறேன், இல்ல குருவி படத்த பத்து தடவ பாக்க வச்சி கொண்ணே புடுவேன்...

வடிவேலு: சரி விடு, நீ ஆரம்பிச்சா என்ன? நான் ஆரம்பிச்சா என்ன? எனக்கு மொத்ததுல இந்த நாடு உருப்படாம போகணும் அவ்ளோதான்....

(நான்: எப்பப்பா..... பதிவு எழுதி விஜைய அசிங்கபடுதுரதுல எவ்ளோ சுகம்.... அதுலயும் வடிவேலு காமடிய உல்டா பண்றதுல என்ன ஒரு ஆனந்தம்....)
------------------------------------------------------------------------------------------------
கவுண்டமணி: ச்சே போன்ன எடுத்தா ஒரே நச்சு நட்சுன்ரானுக.... எதோ வில்லுனு ஒரு விஜய் படமாம் அத விஜய் ரசிகர்களாலே பாக்க முடிலயாம் என்ன வந்து பாக்க சொல்லுறானுக... அட இதகூட விடுப்பா நயண்தராகண்டி பாத்துடலாம்... ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் அவன்கூட சேந்து ஆட சொல்லுரனுகப்பா... நான் என்ன ஆடா இல்ல மாடா அவநோடெல்லாம் சேந்து ஆடுறதுக்கு... ச்சே ஒரே குஷ்டமப்பா சீ கஷ்டமப்பா....

விஜய்: போன் வயர் பிஞ்சி நாலு நாள் ஆட்சி.... பில்லு கட்ட காசு இல்ல... அதான் கட் பண்ணிட்டு போய்டனுக...

கவுண்டமணி: டேய் பேக்கிரி மண்ட தலையா.... எனக்கு தெரியாதா அது... இது என்னோட செல்போண்டா... போண்டா தலையா.... உன்னைலம் வச்சி கட்சி ஆரம்பிக்க போறானே அவன சொல்லனும்டா....

விஜய்: சரி அத விடுங்கண்ணே... இப்ப என்னோட "வேட்டைக்காரன் " பாட்ட கேளுங்கண்ணே " ஹேய் நான் அடிச்சா தாங்க மாட்ட நூருனாலு தூங்க மாட்ட"

கவுண்டமணி: டேய் நிறுத்துடா.... நான் மிதிச்சேன் நீ சட்னி ஆயடுவ... நாலு படம் ஊத்துன பொறகும் நாய்க்கு எகதாளத்த பாரு.. வேட்டைகாரன்னு பேரு வட்சவுடனே நீ எம்.ஜி.ஆர். ஆயடுவையடா... மவனே எட்டி மிதிச்சேன் ஏரியா தாண்டிபோய் விழுந்துடுவ...

-----------------------------------------------------------------------------------------------
விஜய்: நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் டாக்டர் பட்டம் தந்து அவர்களுக்கு கிளினிக் ஆரம்பிக்க இலவசமாக நிலமும் தருவேன்....

விஜய் ரசிகர்கள்: இளைய தளபதி விஜய் வாழ்க!!! தமிழகத்தின் மருத்துவமே!!! எய்ட்ஸ்கிருமியை எரிக்க வந்த எரிமலையே வாழ்க!!!

விவேக்: அட பாவிகளா... டாக்டர் பட்டம்னா என்னனு தெரியுமாடா உங்களுக்கு.... அதுக்கெல்லாம் வருஷ கணக்கா உக்காந்து ஆராய்ச்சி பண்ணனும்டா... அத வச்சி வைதியம்லா பண்ண முடியாதுடா.... இது தெரியாம அவன்தான் அள்ளி விடுரன்னா நீங்களும் நம்புரீங்கலேடா... உங்கள எல்லாம் தௌசண்ட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா....

விஜய்: இங்கே இருக்கும் பேருந்துகளையெல்லாம் ரயில் நிலையங்களாகவும்... ரயில்வே ஷ்டேசன்கள் எல்லாம் விமான நிலையங்களவும் மாற்றி காட்டுவேன்....



விவேக்: அப்டியே ஏர்போர்ட்ல எல்லாம் தண்ணிய நிரப்பி அதுல கப்பல் விடுவேன்னு சொல்ல வேண்டியதுதான? கேக்குறவன் உன் ரசிகன் மாதிரி கேண பயலா இருந்தா வேட்டைக்காரன் படம் ஆஸகார் வாங்கும்னு சொல்லுவடா நீ....ஏய் தமிழகமே இவனெல்லாம் கட்சி ஆரம்பிசித்தான் உன்ன காப்பதனுமா.... இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே கிடையாதாட...

1 comments:

Write comments
Anonymous
AUTHOR
21 December 2010 at 17:04 delete

very funny

Reply
avatar