எந்திரன் படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அஜீத் ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். திண்டுக்கலில் ரஜினி பேனருக்கு பாலாபிஷேகம் செய்து அஜீத் ரசிகர்கள் கொண்டாடினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பரிமளம் தியேட்டரில் இன்று காலை நடிகர் ரஜினி நடித்த சன் பிக்சர்சின் எந்திரன் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்ப்பதற்காக ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலிருந்து தியேட்டர் முன் குழுமியிருந்தனர்.
அப்போது, வத்தலக்குண்டு ஆழ்வார் அஜீத் ரசிகர் மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் மகா தலைமையில் தியேட்டர் முன் எந்திரன் படம் வெற்றிபெற வாழ்த்தி ராட்சத பேனர் வைத்திருந்ததனர். அந்த ராட்சத பேனருக்கு அஜீத் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
இதைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தலைவர் படத்துக்கு தல ரசிகர்கள் வந்து வாழ்த்தி, பாலாபிஷேகம் செய்ததால் அவர்கள் கூடுதல் குஷியடைந்தனர்