Monday, 27 September 2010

Sudharsan SR

8 ந் தேதி வரைக்கும் ஃபுல் எகிறி அடிக்கும் எந்திரன்!

 

Sneha
முக்கிய படங்களையெல்லாம் மொத்தமாக வாங்கி வெளியிடும் சன் பிக்சர்ஸ் தனது தயாரிப்பான எந்திரனை வேறொரு நிறுவனத்திடம் விற்றிருக்கிறது. (ஹ்ம்ம்ம்ம் வளையல் காரிக்கே வளைகாப்பு) வாங்கிய நிறுவனம்தான் படத்தை பிரித்து பிரித்து விற்கிறதாம்.
ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிற மாதிரி வளர்ந்து நிற்கிறான் எந்திரன். இப்படத்தின் ட்ரெய்லரே ச்சும்மா அதிர வைக்கிறது ரசிகர்களை. இந்த நிலையில் திரும்புகிற திசையெல்லாம் எந்திரன்தான் என்கிற மாதிரி தியேட்டர்களையும் புக் பண்ணி அதிர வைத்திருக்கிறார்கள். இப்பவே சென்னையில் உள்ள அத்தனை திரையரங்குகளிலும் வருகிற 8-ந் தேதி வரை டிக்கெட் ஃபுல் ஆகிவிட்டது. (இது இன்று காலை நிலவரம். மாலைக்குள் இந்த 8 ந் தேதி இன்னும் தாண்டி போகலாம்) இத்தனைக்கும் நேற்றுதான் முன் பதிவு தொடங்கியது. பல தியேட்டர்களில் போலீஸ் துணையுடன்தான் டிக்கெட் விற்க வேண்டிய நிலை. அந்தளவுக்கு ஏக கலாட்டாங்களுடன் விற்பனை நடந்து வருகிறது.
இது சன் பிக்சர்சை மட்டுமல்ல, ஜெமினி பிலிம் சர்க்யூட் என்ற திரைப்பட நிறுவனத்தையும் சந்தோஷப்படுத்தியிருக்கிறது. காரணம் இந்த படத்தின் ஏகபோக உரிமையாளர்கள் இப்போது ஜெமினி பிலிம் சர்க்யூட்தான். இவர்களுடன் இணைந்து மதுரை அன்பு பிக்சர்சும் எந்திரனை வெளியிட்டுள்ளது.