சீக்கிரம் வா தல ... நாங்க பாக்கணும் உன் அட்டகாசத்த...
தல இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் பவர் தமிழகம் அறிந்த ஒன்று... ரஜினி படங்களுக்கு அடுத்து திரையிடும் இடமெல்லாம் திருவிழா நடத்திக்காட்டும் ரசிகர் படை... அவர் படம் முதல் காட்சி பார்த்தவர்கள் கண்டிப்பாக எந்த வசனமும் கேட்க முடியாது ... படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களின் கொண்டாட்டம்தான்...
எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டார்.. மீறி பங்கேற்றால் அந்த விழா நாயகனை விட இவருக்குதான் எழும் அதிக கரகோஷம்... கலைஞரின் பாராட்டு விழாவே இதற்க்கு மணியான சாட்சி... இன்றும் தெருவில் நடந்து போகும் நான்கு இளைஞரிடம் கேட்டு பாருங்கள் , அதில் மூன்று பேர் தல ரசிகராகத்தான் இருப்பார்கள்...
யார் என்ன இருட்டடிப்பு செய்தாலும் அவர்கள் கோட்டையிலும் அட்டகாசமாய் வெற்றி கொடி நாட்டுவார்.. சன் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு தெரியும் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வரவேற்ப்பு அவரின் பிறந்தநாள் அன்று அவருக்கு இருக்கும் .... அன்று முழுவதும் வரும் தொலைபேசி அழைப்புகள் அவருக்கு வாழ்த்து சொல்லுவதைத்தான் இருக்கும் ... இதைவிட அவரின் குழந்தை பிறந்தநாளுக்கும் அன்று முழுவதும் அவரின் ரசிகர்கள்தான் வாழ்த்து சொல்லி கொண்டு இருப்பார்கள்....
இன்று திரை உலகில் முன்னணியில் இருப்பவர்கள்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி கொடுத்து அந்த இடத்தை அடைந்து இருப்பார்கள்..
ஒரே ஒரு தோல்வி போதும் அவர்கள் கீழே விழ.. , எழுந்திருக்க முடியாமல் வீழ்ந்து விடுவார்கள்... ரசிகர்கள் என்னும் பேஷ்மென்ட் அவர்களுக்கு ரொம்ப வீக்... அந்த விசயத்தில் தல ரொம்ப ஸ்ட்ரோங்... எத்துனை தோல்வி வந்தாலும் இன்றும் சிகரத்தில்தான் அமர்ந்து உள்ளார்...
இதெல்லாம் விட அவரின் நல்ல உள்ளம்... சிலர் வெளி உலகத்திற்கு நல்லவர் போல காட்டி கொண்டு , சொந்த வாழ்கையில் காசுக்காக யாருக்கும் கொடி பிடிக்க தயாராக இருப்பர்... இன்று இருக்கும் பல கதாநாயகர்கள் காசுக்காக குளிர்பான விளம்பரத்தில் நடித்து கொண்டு இருக்கின்றனர்... ஆனால் இவருக்கு பத்து வருடங்களுக்கு முன்னரே பல குளிர்பான கம்பெனிகள் கேட்பதை விட அதிக காசை கொட்டி குடுக்க தயாராக இருந்தனர்... அப்பொழுதே மறுத்தவர் அவர் .. சொன்ன காரணம் என் ரசிகர்கள் நான் விளம்பரத்தில் சொல்லுகிறேன் என்பதற்காக எவ்வளவு காசு கொடுத்தும் இதை குடிக்க தயாராக இருப்பார்கள் .. அவர்கள் உடல்நலனை கெடுக்க எனக்கு விருப்பம் கிடையாது என்பதே...
நடிப்பு ஒரு கலை அது யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடாது... எனக்கு தெரிந்து மாஸ் படங்கள் கிளாஸ் படங்கள் இரண்டிலும் அசத்தியவர் ரஜினிதான்... ரஜினிக்கு அடுத்து மாஸ் படம் என்றாலும் சரி கிளாஸ் படம் என்றாலும் சரி , வித்தியாசங்கள் காட்டி நடிக்க தெரிந்த ஒரே நடிகர் இன்றைய தலைமுறையில் தலைதான்....
நடிகர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் , வசீகரிக்கும் முகம்... தமிழ் நட்சத்திரங்களில் இவர் அளவுக்கு அழகான முக அமைப்பு யாருக்கும் கிடையாது... தமிழ் திரை உலகில் பெண்களை கவர்ந்த நாயகர்கள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவர் இருப்பார்.. ஜெமினி , பாக்கியராஜ் , சுதாகர் என்று வந்து இப்பொழுது விஜயை கடந்து சூர்யா அந்த இடத்தை பிடித்து உள்ளார்.. ஆனால் இவர்கள் எல்லோரும் மாறி கொண்டே இருப்பார்கள் ... என்றென்றும் காதல் மன்னர்களாய் பெண்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நாயகர்கள் வெகு சிலரே .. எம்.ஜி.ஆர்., ரஜினி , கமல் இந்த வரிசையில் இன்றைய தலைமுறை நடிகர்களில் தல மட்டுமே... (நான் பெண்கள் என்று கூறியிருப்பது அந்தந்த கால கட்டத்தில் இருந்த கல்லூரி மாணவிகளை மட்டுமே ... குடும்ப தலைவிகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை)
இப்படி எல்லாம் இருந்தும் இன்று ஒரு ரசிகனாக நான் கொஞ்சம் காய்ந்துதான் போய் உள்ளேன்... இன்றைக்குபஞ்ச் டயலாக் பெசுரவனேல்லாம் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மாஸ் ஹீரோவா வெற்றி கொடி நட்டவர் தல ... இவர் உச்சத்துல இருந்தப்ப , இவருக்கு பின்னாடி ரொம்ப கீழ இருந்தவனெல்லாம் இன்னைக்குஒன்ற டன் வெயிட்டுடான்னு பஞ்ச் பேசி சினிமா ரேசுல இவருக்கு முன்னாடி போய்டேன் அப்படின்னு பேட்டியெல்லாம் குடுக்குறான்...
தலையோட மாஸ் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுக . இவனுக பேசுறதெல்லாம் உண்மைதான்கிற மாதிரி தலையும் சினிமாவ அம்போன்னு விட்டுட்டு கார் ரேஸ் பக்கம் போயிட்டாரு ... ரசிகனா அவரோட சொந்த விருப்பத்த நிறைவேத்த அவர் ரேசுக்கு போனத நான் வரவேற்கிறேன் .. ஆனால் அதுக்கு இது சரியான நேரம் கிடையாது ... உன்னோட மாஸ தமிழ்நாட்டுக்கு காட்ட வேண்டிய நேரம் இது தல..வா தல.. பக்காவான டீம் அமைந்து இருக்கு... .மறுபடியும் ஒரே ஒரு வாலியோ , தீனாவோ , வரலாறோ கொடு தல ... நாங்க பாத்துகிறோம் மத்தத ... அப்புறம் பாத்துக்கலாம் கார் ரேசெல்லாம்...
தல இருக்கும் போது வாலே ஆடக்கூடாது இங்க வாலுள இருக்கிற மயிரெல்லாம் ஆடுது .. வா தல நம்ம ஆட்டத்த ஆரம்பிப்போம்...
Wednesday, 15 September 2010
சீக்கிரம் வா தல ...
Sudharsan SR
16:04:00
Post a Comment