Thursday, 16 September 2010

Sudharsan SR

விஜயுடன் மோத தயாராகும் சிம்பு

 

ஒரு வருடத்துக்கு எத்தனை படங்களில் நடிப்பது என்பதில் விஜய், அஜித், தனுஷ், விஷால், சிம்பு, பரத், ஆர்யா இடையே இப்போது கடும்போட்டி நிலவி வருகிறது. ஆனாலும் விஜயும், தனுஷும் மட்டும்தான் வருடத்துக்கு குறைந்தது மூன்று படங்களிலாவது நடித்து விடவேண்டும் என்பதில் குறியாக இருகிறார்கள்.


கடந்த சில படங்கள் சரியாக போகவில்லையென்றாலும் தற்போது 50 கோடிக்கு விஜய் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ரஜினிக்கு அடுத்த நிலையில் விஜய் இன்னும் தொடரவே செய்கிறார். தன்னை அஜீத் விசுவாசியாக காட்டிகொண்டிருக்கும் சிம்பு, இனி விஜயுடன் நேரடியாக மோதுவது என்றும், அப்போதான் தனக்கும் மார்கெட் வேல்யூ எகுறும் என்றும் முடிவு செய்திருகிறாராம் சிம்பு.

இதன்முதல்கட்டமாக விஜயை எல்லாமுனைகளிலும் எதிர்கொள்ள தயாராகிவிட்டாராம் சிம்பு. அதன் முதல் கட்டம்தான் 3 இடியட்ஸ் சர்ச்சையை கிளப்பினார் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சிம்புவின் நட்பு வட்டத்தினர்.

அடுத்ததாக விஜய் படத்தோடு இனி களமிரங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறாராம் சிம்பு. இந்த விவகாரம் பற்றி கேள்விப்பட்ட சரத்குமார், இந்த பலப்பரிச்சை வேண்டாம் என்று அறிவுரை செய்ய, “அதனை கண்டு கொள்ளவில்லையாம் சிம்பு. இதனால் தனது வானம் படத்தை பொங்கல் வெளியீடாகவும், போடா போடியை சித்திரை வெளியீடாகவும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறாம் சிம்பு.

ஒவ்வொரு ஆண்டும் எந்த ஹீரோ படம் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, சம்மரில் விஜய் படம் கட்டாயம் ரிலீஸ் ஆகிவிடும். காவலன் படத்தை தீபாவளி வெளியீடாகவும், வேலாயுதம் படத்தை பொங்கல் வெளியீடாகவும் கொண்டு வரும் விஜய், சித்திரை மற்றும் கோடை வெளியீடாக பகலவன் படத்தை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்திருகிறார் என்கிறார்கள்.

அதனால் வேலாயுதம் படத்திற்கு போட்டியாக தன்னுடைய வானம் படத்தையும், பகலவனுக்குப் போட்டியாக தனது வாலிபனை அடுத்த ஆண்டு கோடை ரிலீஸாக களமிரக்கவும் முடிவு செய்து பிரி புரடெக்‌ஷன் வேலைகளை முடுக்கி விட்டிருகிறாராம் சிம்பு. வாலிபன் படத்தின் திரைக்கதையை பக்காவாக எழுதி முடிக்க இரண்டுபேரை கோஸ்ட் ரைட்டர்களாக நியமித்திருகிறாராம். மிக முக்கியமாக வாலிபன் படத்துக்கு யுவனிடம் முன்னதாகவே டுயூன்களை கேட்டிருகிறாராம் சிம்பு. அஜீத் விசுவாசியான சிம்பு இனி விஜய் படம் ரிலீசாகும்போதே தன்னுடைய படத்தையும் ரிலீஸ் செய்து மார்க்கெட்டை உயர்த்தும் நோக்கில் காய் நகர்த்தி வருகிறாம்.