Thursday, 4 February 2010

Sudharsan SR

அரைத்த மாவு... புளித்த வாசம்! வேட்டைக்கார

 


நடிப்புவிஜய்அனுஷ்காசலீம் கவுஸ் மற்றும் பலர்

ஒளிப்பதிவு கோபிநாத்

இசை விஜய் ஆண்டனி

கதை,திரைக்கதைவசனம்டைரக்‌ஷன் : பாபு சிவன்






சென்னையில் இருக்கும் தாதாக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்... தயவு செய்து ஊரைக் காலி செய்துவிட்டு எங்காவது ஓடிவிடுங்கள்... நீங்கள் இருக்கும்வரை விஜய் வேறு கதையையே தேடமாட்டார் போலிருக்கிறதுமொபசல் ஏரியாவில் இருந்து கிளம்பி தலைநகருக்கு வந்து தாதாக்களை ஒழிக்கிறேன் பேர்வழி என்று எங்களை படுத்திக் கொண்டிருக்கிறார்!

தூத்துக்குடியில் இருக்கும் ப்ளஸ் டூ அட்டம்ட் ஸ்டூடண்ட் விஜயக்கு போலீஸ் வேலை மீது ஆசை... அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டான தேவராஜ் போல பெரிய அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைபெயரையே போலீஸ் ரவி என்றுதான் வைத்திருக்கிறார்அதற்காக ப்ளஸ் டூ பாஸாகிதேவராஜ் படித்த சென்னைகல்லூரிக்கே படிக்க வருகிறார்வந்த இடத்தில் வகுப்புத் தோழி அப்பாவிடம் பகுதிநேரமாக ஆட்டோ ஓட்டுகிறார்அந்த தோழியை தாதா வில்லன் அவமானப்படுத்திவிடஅவனை துவைத்து எடுக்கிறார்அவன் செல்வாக்குக்கு பயந்து போலீஸ் விஜயைப் பிடித்து கேஸ் போடுகிறதுபோலீஸ் அதிகாரியாக இருந்து தலைமறைவான தேவராஜைத் தேடிப் போகும் விஜயின் காதலிக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறதுஎன்கவுண்டர் செய்யத் திட்டமிடும் போலீஸில் இருந்து தப்பித்துவந்தால் தேவராஜ் வில்லன்களால் பழிவாங்கப்பட்டு நொந்துபோய் இருக்கிறார்அவரோடு சேர்ந்து வில்லன்களை பழிவாங்குகிறார்பயம்தான் தன்னுடைய மூலதனம் என்று சொல்லும் வில்லனுக்கு பயத்தை உண்டாக்கி அவனை ஜெயிக்கிறார்நடுவில் நடக்கும் போராட்டத்தில் விஜய் தன் நண்பனை இழக்கிறார்.

இந்தக் கதையில் ஒரு எழுத்தாவது புதிதாக இருக்கிறதா என்று சொல்லுங்கள் என்று பெரும்போட்டியே வைக்கலாம்அந்த அளவுக்கு அரதப் பழசான கதை!

விஜய் படம்... அதுவும் சன் பிக்சர்ஸ் வெளியீடு என்பதால் ஏக எதிர்பார்ப்புஆனால்அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லைதான் செய்வதையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார்பாடல் காட்சியில் பரட்டைத் தலையாக ஒரு விக் வைத்துக் கொண்டால் வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்பல்லைக் கடித்துக் கொண்டு பேசும் வசனங்களிலும் காலரை இழுத்து விட்டுக் கொண்டு பேசும் மேனரிசத்திலும்கூட அவருக்கு சலிப்பு வரவில்லை என்பதுதான் ஆச்சரியம்எடுத்த கதையையே எத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொண்டிருப்பார் என்று தெரியவில்லைசினிமா மீது கொஞ்சமாவது அக்கறை வைக்கலாமே விஜய்?

மசாலா பட நாயகிக்கு என்ன வேலையோ அதேதான் அனுஷ்காவுக்கு... படு உயரமான ஹீரோயின்... அவரே நடிக்கலாம் என்று ஆசைப்பட்டாலும் அதற்கு வாய்ப்பே இல்லாத நிலை.பாடல் காட்சிகளில் மட்டும் கலர் கலராக டிரெஸ் மாட்டிக் கொண்டு வந்து ஆடிவிட்டுப் போகிறார்.

வில்லன்களை எங்கிருந்துதான் பிடிப்பார்களோ... நீள தலைமுடி வைத்திருந்தால் வில்லன்பெரிய மீசை வைத்திருந்தால் வில்லன்ஷெர்வானி கோட் போட்டுக் கொண்டால் வில்லன் என்று வகைக்கொரு வில்லனாக வைத்து வரிசையில் வந்து அடி வாங்க வைக்கிறார்கள்அதிலும் வில்லனின் ராஜ்ஜியத்தை ஒவ்வொன்றாக அழித்து அவனைப் பதற வைக்கும் காட்சிகளை எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டதுஅதனால் வில்லன் சலீம் கவுஸுக்கு இழப்பு ஏற்படும்போது நமக்கு சலிப்பு ஏற்படுகிறது.

தென்கோடியில் இருக்கும் தூத்துக்குடியில் இருக்கும் ஒருவனை இம்ப்ரஸ் செய்யும் அளவுக்கு பரபரபாக இருக்கும் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் போட்டு அடிப்பார்களாம்... அவர் குடும்பத்தைக் கொளுத்துவார்களாம்...அவருடைய கண்களில் கரப்பான் பூச்சிக்கு அடிக்கும் ஸ்பிரேயை அடிப்பார்களாம்... இது எதுவுமே எந்த பத்திரிகையிலும் வராதாம்இது சும்மா சாம்பிள்தான்... இதுபோல பல பொத்தல்களால் பரிதாபமாகத் தொங்குகிறது திரைக்கதை!

இசை விஜய் ஆண்டனி... சும்மாவே குத்துப் பாடல்களைப் போட்டுத் தாக்கும் இவருக்கு விஜய் படம் கிடைத்தவுடன் ரொம்பவே உற்சாகமாக குத்தியிருக்கிறார். ’நான் அடிச்சா தாங்கமாட்டே...”, ’புலி வருகுது புலி வருகுது”, ’என் உச்சி மண்டையிலே கிர்ருங்குது...’ எல்லாம் டிபிகல்விஜய் பிராண்ட்!

டைரக்டர் பாபு சிவனுக்கு இது முதல் படம்..! தன் இன்னிங்கிஸின் முதல் ஓவரில் முதல் பந்தை நோ பாலாகப் போட்ட பவுலரைப் போல அடுத்த படத்தில் இருந்து புதுக் கணக்கைத் தொடங்குங்கள்!

அரைத்த மாவு... புளித்த வாசம்!

தெனாலி விமர்சனக் குழு