Showing posts with label காப்பி. Show all posts
Showing posts with label காப்பி. Show all posts

Tuesday, 26 October 2010

Sudharsan SR

தொடர்ந்து 4 படங்களை ரீமேக்கும் விஜய்..

 
விஜயின் ‘காவலன்’ படப்பிடிப்பு முடிவடைந்து, தற்பொழுது பிர்புற தயாரிப்பு பணிகளுக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து புதுப்பட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது விஜயின் பழக்கமாகும். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே ஒன்று அல்லது இரண்டு புதுப்படங்களுக்கு விஜய் ஒப்புக்கொண்டு விடுவார். ‘காவலன்’ படப்பிடிப்பு நடைபெற்ற போதே ‘வேலாயுதம்’ படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். தற்பொழுது ‘காவலன்’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு, எந்த படத்தில் நடிப்பது என விஜய் சிந்தித்து வருகிறார்.
தெலுங்குப் படமான ‘பிருந்தாவனம்’ படத்தின் உரிமையை பெற விஜய் ஆவல் கொண்டிருப்பதாக நாம் கேள்வியுருகிறோம். எனவே ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு ‘பிருந்தாவனம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய் நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. ‘பிருந்தாவனம்’ படத்தில் ஜூனியர் NTR, சமந்தா, காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட எந்தவொரு தெலுங்குப் படமும் விஜயை இதுவரை கைவிட்டதில்லை. ஆனால் இம்முறை விஜய் தொடர்ச்சியாக மறு உருவாக்கப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ‘காவலன்’ மலையாளப் படமான ‘பாடிகார்ட்’ படத்தின் மறு உருவாக்கமாகும், அதே போல ‘வேலாயுதம்’ தெலுங்கின் வெற்றிப் படமான ‘ஆசாத்’ படத்தின் மறு உருவாக்கமாகும். ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிக்க ’3 இடியட்ஸ்’ படமும் மறு உருவாக்கம் செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த ‘மறு உருவாக்கமயம்’ விஜய்க்கு வெற்றியை தேடித் தருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
Read More

Saturday, 23 October 2010

Sudharsan SR

விஜய்யின் அடுத்த ரீமேக் படம்...?

 
 தெலுங்கில் கடந்த வாரம் திரைக்கு வந்து வசூலில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் ‘பிருந்தாவனம்’.

ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால், சமந்தா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ், ஸ்ரீ ஹரி என மிரட்டலான நடிகர்கள் பட்டாளம் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்கம் வம்சி. இயக்குனர் ‘வம்சி’ என்றாலே தெலுங்கு திரையுலகில் ஹிட்தான். அந்தப் பேருக்கு மேலும் வாசம் சேர்த்துள்ளது பிருந்தாவனம். 

இப்போது ஏன் இந்த தெலுங்குப் பட டீட்டைல்...? எல்லாம் விஜய்யின் அடுத்த பட விவகாரமாகதான். 

எப்போதுமே தெலுங்கில் ஹிட்டடிக்கும் படம் அப்படியே தமிழில் பிட்டடிக்கப்படுவது (ரீமேக் செய்வது) வழக்கம். இந்த வழக்கம் இங்கிருந்து தெலுங்கிலும் நடக்கும் காலங்காலமான பழக்கம்தான். 

தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்குக்கு பிரசித்தி பெற்றவர்கள் விஜய், தனுஷ், ஜெயம் ரவி தரப்பினர். ஜெயம்ரவி - ஒண்ணு ரெண்டு படம் போக டோட்டலாகவே ரீமேக் ஃபார்முலாதான். தனுஷுக்கும் யாரடி நீ மோகினி, குட்டி, அடுத்து வெளியாகவிருக்கும் உத்தம புத்திரன் என பெரிய பட்டியல் போடலாம்.

 
 
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்... பிருந்தாவனம் பெற்று வரும் வெற்றியை கேள்விப்பட்ட விஜய், அதன் ஒரு படப்பெட்டியை வரவழைத்து போர் பிரேம்ஸ் திரையரங்கில் போட்டு பார்த்தாராம். தனது குடும்பத்தினர், நண்பர்களில் முக்கியமானவர்கள் என தனது நெருங்கிய வட்டாரங்களுடன் பிருந்தாவன தரிசனம் நடத்தியிருக்கிறார் விஜய். 

படம் பார்த்து முடித்தபின் விஜய்க்கு அப்படி ஒரு சந்தோஷமாம். படத்தைப் பற்றி தனது திரைவட்டார நண்பர்களிடம் ரொம்ப பெருமையாக பேசினாராம். பிடிச்சுருந்தா ரீமேக் பண்ணிட வேண்டியதுதானே என நண்பர்கள் கேட்டதற்கு மௌனப்புன்னகை மட்டும் புரிந்தாராம் விஜய். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி. விஜய்யின் மௌனப் புன்னகை...? வேறென்ன ரீமேக்கின் அறிகுறிதான். அப்படி என்றால்... விரைவில் விஜய்யின் பட வரிசையில் பிருந்தாவனமும் இடபெற்ற தகவல் வெளியாகலாம்.  

ரெடி ஸ்டார்ட்... பிருந்தாவனம் ரீமேக் கவுண்டவுன்.

Read More

Monday, 27 September 2010

Sudharsan SR

வேலாயுதம் --- ஈ அடிச்சான் காப்பியின் உச்சம்

 
ஒரு வேற்று மொழி படத்த ஆட்டைய போட்டு நம்ம ஊருல படம் எடுக்கிறத பார்த்திருக்கிறேன்...

ஏன் சில பன்னாடைகள் நம்ம ஊரு படத்தையே ஆட்டைய போட்டு நமக்கே புது படம் ஓட்டுவாணுக...
ஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய  போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி ... பாருங்க மக்களே அந்த கொடுமைய ...



(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா? )




(இயக்குனர்  ராஜா : ஏய் போட்டோகிராபர் ... ஒரிஜினல் படத்துல டிரஸ் காத்துல பறக்கவே இல்ல ... நம்ம படத்துல காத்துல பறக்குது ... தப்பு தப்பா எடுக்காத .. வா இன்னொரு டேக் போகலாம்... அடுத்த தடவையாவது சரியா அதுல இருக்கிற மாதிரியே எடு...

போட்டோகிராபர் :  இல்ல சார் அவரு சாதாரண ஆளு அதனால லைட்டா பறக்குது நம்ம தளபதி சுத்தி அடிக்கிற சூறாவளி அதான் கொஞ்சம் தூக்கலா பறக்குது 
)

சினிமா உலக சரித்திரத்தில் முதல முறையாக  ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளார் நம்ம தளபதி....  நாவல படமா எடுத்து பாத்திருப்பீங்க ... நாடகத்த படமா எடுத்து பாத்திருப்பீங்க .. புராணகதைகளை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... உண்மை சம்பவங்களை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... ஆனா விடியோ கேம படமா எடுத்து பாத்திருப்பீங்களா? ஜேம்ஸ் கேமரூனுக்கே வராத ஒரு யோசனை நம்ம தளபதிக்கு வந்திருக்கு பாருங்களேன்....
பின்ன என்னங்க யார் யார் எந்த விசயத்துல எக்ஸ்பெர்ட்டோ அந்த விசயத்துலதான அவங்க புதுமைகளை புகுத்த முடியும் ...

நான் போக்கிரி காப்பி  பாத்திருக்கேன் 
சந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன் 
ப்ரு காப்பி பாத்திருக்கேன் 
பில்ட்டேர் காப்பி பாத்திருக்கேன் 
ஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன் 
ஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....
Read More
Sudharsan SR

நா திருந்தவே மாட்டேன் ! !

 
Read More

Sunday, 18 April 2010

Sudharsan SR

The Real Copystar

 
தமிழ் சினிமா பிரியர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் ஆனாலும் இன்னமும் புரியாத சிலருக்காக இங்கு சொல்ல வேண்டி உள்ளது


காதலுக்கு மரியாதை - Aniyatha Pravu என்ற மலையாள படத்தின் திரைக்கதை சுடப்பட்டுள்ளது...

பிரியமானவளே - ப்ரிவற்றபந்தம் என்ற தெலுங்கு படத்திலிருந்து அப்படியே copy அடிக்கப்பட்டது

பிரெண்ட்ஸ் - Friends என்ற மலையாள படத்தின் தழுவல்

பத்ரி - தம்மாடு என்ற தெலுங்கு படத்தின் தழுவல் - அதே கதை

யூத் - Chirunavvutho என்ற தெலுங்கு படத்திலிருந்து BIT அடிக்கப்பட்டது

வசீகரா - Nuvvu Naaku Nachav என்ற தெலுங்கு படத்தின் தழுவல்

கில்லி - ஒக்கடு (OKKADU) என்ற தெலுங்கு படத்தின் கதை, திரைக்கதை BIT அடிக்கப்பட்டுள்ளது.... இதில் வித்தியாசம் என்னவென்றால் விஜய் தனது கபடி ஆட்டத்தில் SEMIFINAL போட்டியில் தோற்றுவிட்டு FINAL போட்டிக்கு தெரிவாகி வென்று வருவதுதான்....

ஆதி - Athanokkade என்ற தெலுங்கு வெற்றி படத்திலிருந்து copy அடிக்கப்பட்டது... ஆனால் தமிழில் மிகப்பெரிய தோல்வி படமாகியது....

போக்கிரி - போக்கிரி என்ற தெலுங்கு படத்தின் தழுவல்... கதை திரைக்கதை copy, தெலுங்கில் நடித்த மகேஷ் பாபு என்ற நடிகரின் உடை அலங்காரம் உட்பட BIT அடிக்கப்பட்டுள்ளது...

குருவி - Chatrapathi என்ற தெலுங்கு படத்திலிருந்து கதை மற்றும் கேமரா angle, நடிகரின் உடை அலங்காரம் உட்பட எல்லாம் copy அடிக்கப்பட்டுள்ளது...

வில்லு - SOLDIER என்ற ஹிந்தி படத்தின் தழுவல்

வேட்டைக்காரன் - Vikramakudu என்ற தெலுங்கு படத்தின் மறுவடிவம் என்றே சொல்லலாம்...
Read More