Thursday, 12 September 2013

Ram

பல் டாக்டர் ஜெஸ்லி என்பவருக்கும், பரத்துக்கும் 9ம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி, 14ம் தேதி மாலை, எம்.ஆர்.சி நகரிலுள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெறுகிறது. தனது காதல் பற்றி, நிருபர்களிடம் பரத் கூறியதாவது: துபாயை சேர்ந்த ஜெஸ்லி, சென்னையில் பல் டாக்டருக்கு படித்துள்ளார். விரைவில் எம்டிஎஸ் படிக்க திட்டமிட்டுள்ளார். அவரை நண்பர் மூலம் சந்தித்தேன். நாளடைவில் எங்கள் நட்பு காதலாக மாறியது. அவர்தான் என் வாழ்க்கைக்கு பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது. காதலை சொன்னேன். ஏற்றுக்கொண்டார். இதுவரை சினிமா பார்த்திராத அவர், இப்போதுதான் நான் நடித்த படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளார். இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல், கலப்புத் திருமணம் இது. நான் நடித்துள்ள ‘கில்லாடி’ விரைவில் ரிலீசாகிறது. அடுத்து ‘எம் மகன்’ 2வது பகுதி, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘கூதரா’, இந்தியில் ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.