Thursday 23 December 2010

Sudharsan SR

காவலன் காமெடியை நம்பியிருக்கிறது

 

சித்திக் இயக்கும் படங்கள் என்றால் சென்டிமெண்டைவிட காமெடி தூக்கலாக இருக்கும். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கிய பாடிகாட் படத்தில் காமெடியைவிட காதலுக்குதான் அதிக முக்கியத்துவம் தந்திதிருந்தார். இதனை ஒரு பேட்டியில் சித்திக்கே குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் படம்தான் தமிழில் காவலனாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை சித்திக் படம் என்றால் காமெடிக்காகப் பார்க்கலாம் என்றொரு கருத்து இருக்கிறது. இதனை பொய்யக்கக் கூடாது என்பதற்காகவே வடிவேலுவை படத்தில் சேர்த்திருக்கிறார்கள். மலையாள ஒ‌ரி‌ஜினலில் இல்லாத பல காமெடிக் காட்சிகளும் காவலனில் சேர்க்கப்பட்டுள்ளது.


முக்கியமாக காந்தத்தில் செய்த உடை அணிந்து வடிவேலு செய்யும் களேபரம் வயிற்றைப் பதம் பார்க்கும் என்கிறார்கள்.

மொத்தத்தில் காவலன் காமெடியை நம்பியிருக்கிறது.