Tuesday, 5 January 2010

Sudharsan SR

The Tricks of Cinima

 

1 . Vijay & Simbu இரண்டு பேரும் வாரிசு நடிகர்கள், இவர்கள் இருவரும் சினிமாக்கு
அப்பாக்களால் வந்தாலும் இரண்டு பேருக்கும் பிரச்சினையே அந்த
அப்பாக்கள்தான். 2. விஜய் தன்னை நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார்( Next Superstar )
என்றும்,சிம்பு தன்னை லிற்றில் சூப்பர்ஸ்டார்( Little Superstar ) என்றும்
தமக்குத்தாமே பில்டப்பண்ணி நொந்து நூடில்ஸ் ஆனவர்கள். 3 .
சொல்லிவைத்தாற்போல் இவர்கள் இருவரும் இறுதியாக நடித்த மூன்று படங்களும்
இவர்களை ஏமாற்றிவிட்டது. விஜய்
(அழகியதமிழ்மகன்,குருவி,வில்லு),சிம்பு(வல்லவன்,காளை,சிலம்பாட்டம்) 4 .
இருவரும் ஐந்து பாடல்களுக்கு நடனமாடுவதற்காக 2 .30 மணிநேரம் படம்
நடிப்பவர்கள்(?). 5 . இருவரும் எந்தத் தோல்விப்படமாக இருந்தாலும் நூறு
அல்லது நூற்றியைம்பது நாட்கள் படத்தை ஒட்டாமல் ஓயமாட்டார்கள். இதில் விஜய்
கில்லாடி இவர்மாதிரி தோல்விப்படங்களுக்கு யாரும் வெற்றிவிழா
கொண்டாடமுடியாது. 6 .இவர்களது ஒருபடம் ரிலீஸ் என்றால் இவர்களது காலடிபடாத
தமிழ்த்தொலைக்காட்சி கலையகங்களே இருக்காது,எல்லா கலையகங்களுக்கும் ஒரு
ரவுண்டு கிளம்பிடுவாங்க. 7 . படம் வெளியான அடுத்தநாளே “இந்தத்
திரைப்படத்தை வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு நன்றி ” அப்பிடின்னு ஒரு
அறிக்கை விடுறதில இந்த இரண்டுபேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவரில்லை.
8 . இவர்கள் இருவரும் பஞ்ச்டயலாக் பேச ஆரம்பித்தால் வடிவேலுவையே
ஒரம்கட்டிவிடுவார்கள், அம்புட்டு காமடியாயிருக்கும்.