Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Wednesday, 29 December 2010

Sudharsan SR

திக்கி திணறும் காவலன் || தியேட்டருக்கு பஞ்சம்

 


பொங்கலுக்கும் காவலனுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமம்-விஜய்க்கு பெரும் நெருக்கடி!
விஜய் நடிக்க வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவர் சந்தித்திராத நெருக்கடியை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
அசினுடன் அவர் நடித்துள்ள காவலன் திரைப்படம், எல்லாம் முடிந்த பிறகும் கூட ரிலீசுக்கு வழியில்லாமல் தவிக்கிறது. இதுவரை மூன்று முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்ட்டு, தியேட்டர்கள் கிடைக்காமல் தள்ளிப் போடப்பட்டது காவலன்.
கடைசியாக டிசம்பர் 17 என நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தேதிக்கு தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்றும், அப்படியே கிடைத்தாலும் அடுத்த வாரம் மன்மதன் அம்பு வெளியாகும்போது தூக்கிவிட வேண்டும் என்றும் நிர்பந்திக்க டென்ஷனான விஜய், படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைத்து விட்டார்.
இப்போது பொங்கலுக்கும் கூட இந்தப்படத்துக்கு நல்ல தியேட்டர்கள் தரமுடியாது என்றும் ஏதாவது மூன்றாம் தர திரையரங்குகள்தான் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏன்?

காரணம், பொங்கலுக்கு கருணாநிதியின் இளைஞன், சன் பிக்ஸர்ஸின் ஆடுகளம், க்ளவுட் நைன் புரொடக்ஷன்ஸின் சிறுத்தை ஆகிய படங்கள் வெளியாகின்றன. இளைஞன் படத்தை உதயநிதி ஸ்டாலின் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறார். முன்கூட்டியே தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து கையெழுத்தும் வாங்கிக் கொண்டுள்ளார்.
அடுத்து, ஆடுகளத்தை சன் பிக்ஸர்ஸ் ரிலீஸ் செய்கிறார்கள். விஜய் படம் தயாராகும் முன்பே ஆடுகளத்துக்காக தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மூன்றாவது படமான சிறுத்தையை முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வெளியிடுகிறது. இந்த நிறுவனமும் முன்கூட்டியே திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மன்மதன் அம்பு உள்ளிட்ட மேற்கண்ட படங்களுக்காக நிறைய தியேட்டர்கள் புக் ஆகி விட்டதாக கூறப்பட்டாலும் கூட, காவலனுக்கு தியேட்டர் கிடைக்காமல் போயிருப்பதற்கு ‘உண்மை’யான காரணம் என்ன என்பது மற்றவர்களை விட திரையுலகினருக்கு மிக நன்றாகவேத் தெரியும். இருந்தாலும் வாய் திறந்து பேச முடியாத அளவுக்கு அவர்களை ஏதோ ஒரு ‘பாசவலை’ கட்டிப் போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சிங்கம் வேட்டையாடிய இறையின் மிச்சம் கிடப்பதைப் போல, இந்த மூன்று பெரிய நிறுவனங்களின் படங்களுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதியிருந்தால் அது காவலனுக்கு தரப்படும் என்கிறார்கள் எக்ஸிபிட்டர்ஸ் வட்டாரத்தில்.
“ஒருவேளை இப்போது, அதிக திரையரங்குகளில் ரிலீஸாகும் மன்மதன் அம்பு பொங்கல் நேரத்திலும் ஓடிக் கொண்டிருந்தால், காவலன் ரிலீஸ் பற்றி விஜய் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே…”, என்கிறார்கள்.
தன்னைச் சுற்றிலும் கணக்காக ‘ஆப்பு’ வைத்து விட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள விஜய், தற்போது அதிமுக ஆதரவுப் பிரமுகர்களிடம் உள்ள தியேட்டர்கள் குறித்துக் கணக்குப் போட்டுப் பார்த்துள்ளார். அது கிட்டத்தட்ட 120க்கும் அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் காவலனை திரையிட அவர் முயற்சிகளை தொடங்கியுள்ளாராம்.

Read More

Tuesday, 28 December 2010

Sudharsan SR

கமலின் அடுத்தப்படம்

 
மன்மதன் அம்பு வெளியான வேகத்தில் தனது அடுத்த அம்பை எய்யத் தயாராகிவிட்டார் கமல் ஹாஸன். இந்த முறை வெளிவரும் படம் தலைவன் இருக்கின்றான், அவரது சொந்த இயக்கத்தில் உருவாகும் படம் இது!
டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அனுஷ்காவிடம் மொத்தமாக 6 மாதங்கள் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும், தமிழில் இதுவரை யாரும் பெறாத அளவு பெரும் சம்பளம் தர ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழில் சிம்புவுடன் வானம் படத்தில் நடிக்கும் அனுஷ்கா, வேறு புதிய படங்களில் நடிக்க கால்ஷீட் தராமல் உள்ளார்.  தலைவன் இருக்கின்றான் ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதாக கமல்ஹாஸன் சில தினங்களுக்கு முன் கூறியது நினைவிருக்கலாம். புத்தாண்டில் இந்தப் பதிய பட அறிவிப்பை வெளியிட உள்ளார் கமல்.
Read More

Sunday, 26 December 2010

Sudharsan SR

கமலுக்கு ஏன் இத்தனை கோபம்?

 



       'வாலி 80' கொண்டாட்டம். காவியக் கவிஞராக விளங்கும் வாலியின் 80வது பிறந்தநாள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. தமிழ் திரையின் துருவ நட்சத்திரங்களான ரஜினி, கமல் இந்த விழாவில் பங்கேற்றனர். விழாவில் வாலி எழுதிய பாடல்களில் 1000 பாடல்களை தேர்வு செய்து அதை புத்தகமாக வெளியிட்டனர். இந்த 'வாலி 1000' புத்தகத்தை கமலஹாசன் வெளியிட அதை இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். இதில் கவிபேரரசு வைரமுத்துவும் கலந்து கொண்டார் என்பது இன்னொரு சிறப்பு. கமல் புகைப்பட நிருபர்களிடம் ஏதோ ஒரு கோபத்துடனே இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. கமல் காரில் இருந்து இறங்கியவுடன் பளீர் என வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. அது வீடியோ காமிராவின் ஸ்பாட் லைட். சட சடவென ஸ்டில் கேமராக்களின் ப்ளாஷ். வெளிச்சம் தன் மீது படுவதை விரும்பாத கமல் கையை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டார். லைட்டை அணைக்க சொல்லி கோபத்துடன் கை அசைத்தார். ஆனால் பளீர் வெளிச்சம் படர்ந்தபடியே இருந்தது. 'லைட்டை ஆப் பண்ணுங்கப்பா...' என்று அங்கிருந்தவர்கள் கூச்சல் போட... லைட் அணையவில்லை.


               லைட்டை நிறுத்தினால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என கமல் கோபத்துடனே தன் கையை அசைத்தபடி சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வழியாக லைட் அணைக்கப்பட்டது. கமலும் விழா அரங்கிற்குள் சென்றார். 'பளிர்னு லைட் பட்டதினாலே கோபப் பட்டுட்டாரு போலப்பா! என்று புகைப்பட நிருபர்கள் பேசிக் கொண்டார்கள்.


              விழா அரங்கில் 'வாலி 1000' புத்தகம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. கமல் எழுந்தார், மேடையில் இருக்கும் அனைவரும் எழுந்தார்கள். மீண்டும் புகைப்பட நிருபர்கள் க்ளோசப்பில் போட்டோ கிடைக்கும் என்று கமலை மேடைக்கு முன்பாக அழைத்தார்கள். 'ஏன் இங்கே நின்னா எடுக்கமுடியாதா?' என கேட்டார் கமல். கமலை வாலி முன்னுக்கு அழைத்தார். அதை மறுத்த கமல், 'இல்லைப் பரவாயில்லை...' என்று கையசைத்தப்படியே சொன்னார். புத்தகம் வெளியிடப்பட்டது. ஏன் நம்ம மேல இவ்வளவு கடுப்பா இருக்காரு என்று புகைப்படக் நிருபர்கள் பேசிக் கொள்ள... அருகில் அமர்ந்திருந்த சூர்யாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார் கமல். வாலியைப் பற்றி மேடையில் இருந்தவர்கள் பாராட்டிப் பேசினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாலி எழுதி அவர் பாடிய பாடல்களை மேடையில் பாடிக் கொண்டிருந்தார். பாடல்களுக்கு மெய்மறந்து கைத்தட்டிக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். திடீரென விண்ணைப் பிளக்கும் அளவிற்கு கைத்தட்டல் சத்தம், மேடையில் ரஜினி! ரசிகர்களுக்கு வணக்கம் வைக்கிறார். (எப்போ வருவாரு எப்படி வருவாரு என யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவாரு... உண்மைதான்). இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.


           ரஜினியுடன் வைரமுத்துவும் வந்திருந்தார். இன்னும் ஆச்சர்யம்! வாலி பாராட்டு விழாவில் வைரமுத்துவா? ரஜினி பேசும் போது வாலியைப் பாராட்டி பேசியதோடு அவர் மீது எனக்கு ஒரு கோபம் என்று குண்டைத் தூக்கிபோட்டார்! எல்லோரும் புருவம் நிமிர்த்த... என் மகள் திருமணத்திற்கு நான் நேரில் சென்று வாலி சாருக்கு பத்திரிகை வைத்தேன். ஆனால் அவர் திருமணத்திற்கு வரவில்லை. அதனால் இந்த விழாவுக்கு வரமாட்டேன் என்று நான் மறுத்துவிட்டேன். வைரமுத்து தான் என்னை அழைத்து வந்தார் என்றார் ரஜினி. மேலும் 'நாம நண்பர்கள் மாதிரிதானே பழகுறோம்... இல்லையா என்னால வரமுடியாது என்று என்னிடம் நேராக சொல்லியிருக்கலாமே. அது பற்றி அவர் மீது எனக்கு ரொம்பவும் கோபம். இன்று வரை அவரிடம் நான் பேசவே இல்லை' என்று உரிமையாக தன் கோபத்தை வெளிப்படுத்தினார் ரஜினி. வாலி பேசும் போது, நேரில் வந்து பத்திரிகை வைத்தும் நான் திருமணத்திற்கு வரவில்லை என்று ரஜினி ஏன் மீது கோபப்படுகிறார். நான் அப்படி ஒன்றும் நாகரீகம் அற்றவன் அல்ல, அன்று தான் என் மனைவியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது என்று பதிலளித்தார். என்னைக் கோபக்காரன் என்று ரஜினி என்னிடம் ஒருமுறை சொன்னார் என்ற நிகழ்வை சொன்ன வாலி... கோபப்படாமல் இருக்க நான் என்ன மண்புழுவா? மரவட்டையா? மனுஷன்யா என்று ஜாலியாக ஒரு பஞ்ச் வைத்தார். ரஜினி தன் கோபத்தை வெளிப்படையாக மைக் முன்பு பேசிவிட்டார். கமல் ஒரு விளங்க முடியா கவிதை!

Read More

Friday, 24 December 2010

Sudharsan SR

மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்

 


கமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர்  சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா? என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.



பெரிய எதிர்பார்ப்புகள்பெரிய விளம்பரம், பெரிய பரபரப்பு இல்லாத கமல் படம்.பொதுவாக தமிழ் திரைபடங்கள் வெள்ளிக்கிழமை ரிலிஸ் செய்வார்கள். இந்த படம் வியாழக்கிழமை அன்றே ரிலிஸ் செய்து இருக்கின்றார்கள்...

ஒரு நடிகையை சமுகம் எப்படி பார்க்கின்றது என்பதை காமெடியோடு சொல்லி  இருக்கின்றார்கள்..


மன்மதன் அம்பு படத்தின்  கதை என்ன??

திரிஷா பிரபல நடிகை,  அவரை பணக்கார மாதவன் காதலிக்கின்றார்..மாதவனுக்கு சந்தேக புத்தி.. மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பாரிஸ் கிளம்பி செல்கின்றார் நடிகை திரிஷா.. மாதவனுக்கு திரிஷாவுக்கு யாராவது பாய்பிரண்ட் இருப்பார்களோ என்று சந்தேகபட்டு திரிஷாவை வேவு பார்க்க மேஜர் கமலை அனுப்புகின்றார்...நிறைய நெகிழ்ச்சி மற்றும் குழப்பங்களுக்கு விடை கண்டு படம் இனிதே நிறைவடைகின்றது.




படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

கமலின் என்ட்ரி இருக்கின்றது பாருங்கள்.. வேட்டையாடு விளையாடுக்கு அப்புறம் எனக்கு இந்த படத்தின் கமல் என்ட்ரி பிடித்து இருக்கின்றது.. காரணம் ஹுஸ் த ஹீரோ சாங்கோடு கமல் என்ட்ரியால்எனக்கு அது பிடித்து இருக்கலாம்...

நீ நீல வானம் பாட்டில் எல்லா நிகழ்வுகளும் ரிவர்சில் போவது போலான புதிய முயற்ச்சியை செய்து இருக்கின்றார்...

கமல் தகிடுதத்தம் பாடலுக்கு சோலோவாக போடும் ஒரு டான்ஸ் ...1980 மற்றும் 1970 கமலை நினைவு படுத்துகின்றன...

படத்தில் ஒரு கப்பலை காட்டி இருக்கின்றார்கள்.. அது படம் பார்க்கும் தமிழ் ரசிகனுக்கு புதிய விஷயம்.. ஏற்க்கனவே பல ஆங்கிலபடங்களில் பார்த்து இருந்தாலும் இந்த படம் தமிழில் பிரமாண்டம்தான்..

இந்த படம் ஹாலிவுட் படமான தேர் ஈஸ் சம்திங்க அபவுட் மேரி என்று ஒரு சிலரும் ஒரு சிலர்  வேறு சில படங்களின் தழுவல் என்று சொல்கின்றார்கள்..






திரிஷா சூர்யாவோடு ஆடும் பாடலோடு வேறு எந்த ஆட்டமும் இல்லை...
திரிஷா இந்த படத்தில் தமிழ் பேசி நடிக்கவும் செய்கின்றார்...கமல் திரிஷாவுக்கு பெரிய நெருக்கமான காட்சிகள் இல்லை...

வீரத்துக்கு உச்சகட்டம் அஹிம்சை போன்ற இன்டலெக்சுவல் டயலாக்குகள் படம் முழுவதும் விரவி கிடக்கின்றன... 

கமலுக்கு திரிஷாவுக்குமான காதலின்  அழுத்தத்தை சொல்லும் அந்த கவிதை சொல்லும் காட்சி தூக்கபட்டு விட்டது.. அதனால் அந்த காதல் அழுத்தம் இன்னும் தேவையாக இருக்கின்றது...

ஒளிப்பதிவு...மனுஷ்நந்தன்.. எழுத்தாளர் ஞானி அவர்களின் பையன்.. இவர் ரவிகே சந்திரனிடம் தொழில் பயின்றவர்.,.ரிவர்சாங்கில் நல்ல ஒர்க்...  பாரினில் திரையில் முழு சுவரும் தெரியும் படி சின்ன கேப்பில் மட்டும் தெரு தெரிவது போல ஒரு ஷாட் அதில் ஒரு வெள்ளைகாரர் நடந்து போவது போல இருக்கும் அந்த ஷாட் அருமை ..

இந்த படம் ரொமான்டிக் காமெடிபடம்...

திரிஷாவின் கண்களில் மென்சோகம் எனக்கு பிடிக்கும். அது இந்த படம் முழுக்க தெரிகின்றது.. சங்கீதா திருமணத்துக்கு பின் நல்ல வெயிட் போட்டு இருப்பது  வயிற்று தொப்பை  தெரியவைக்கின்றது..

கமலோடு ஜோடி போடும் அந்த வெள்ளைக்கார பெண் மிக அழகாக இருக்கின்றார்.. பட் டயலாக் இல்லாமல் நடித்து இருக்கின்றார்..





மாதவன் நெகட்டிவ் ரோல் ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்.. மிக முக்கியமாக தண்ணி அடித்து விட்டு பேசுவது போவான காட்சிகளில் மேடி கனக்கச்சிதம்... உஷா உதுப், ஓவியா, எனதலைகாட்டும் நபர்கள் குறைவு..

இந்த கேஎஸ்ரவிக்குமார் முதல் காட்சியிலேயே தொழில் நிமித்தமாக தலை காட்டிவிடுவதால்  படம் முடியும் போது கடைசி காட்சியில் மிஸ்சிங்..
தேவிஸ்ரீபிரசாத்.. ஒரு பாடலில் கித்தார் மீட்டிய படி வருகின்றார்...

கமல் அனைத்து பாடலையும் எழுதிஇருக்கின்றார்.. நீ  நீலவானம்... சாங் இப்போது என் பேவரிட்...

ரமேஷ் அர்விந் ஊர்வசி இருக்கின்றார்கள். ரமேஷ் அரவிந்தா என்று  ஆச்சர்யபடுவது போல நடித்து இருக்கின்றார்..

படத்தில்  பல காட்சிகள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன... மலையாளியாக வரும் கேரக்டர் வரும்  போது எல்லாம் எரிச்சல் வருகின்றது..

இந்த படம் நாடகம் போல  ரிகர்சல்  செய்து விட்டு எடுத்த படம்..படத்தின் பிரேம்களில்  ரிச்நெஸ் தெரிகின்றது..

ஒரே ஒரு சண்டைக்காட்சிதான் என்றாலும் அதை ரசிக்கும் வகையில் எடிட் செய்யது இருக்கின்றார்கள்..

வழக்கமான கேஸ்ரவிக்குமாரின் டிரேட் மார்க் சிரிப்பு படம்.

பைனல் கிக்..
மனசு விட்டு சிரித்து வர பார்த்து விட்டு வரலாம்..
Read More

Thursday, 23 December 2010

Sudharsan SR

கமலை வாழ்த்திய ரஜினி !

 
மன்மதன் அம்புவின் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார் கமல். தான் திரைக்கதை எழுதி நடித்து இன்று வெளியாகி உள்ள மன்மதன் அம்பு படத்தை நேற்று தன் சினிமா உலகின் நெருங்கிய நண்பர் ரஜினிக்கு போட்டுக் காண்பித்தார் கமல். படம் பார்க்க ரஜினி தன் குடும்பத்துடன் வந்தார். கமலும் குடும்பத்தோடு வந்திருந்தார்.  கமலின் மற்ற சினிமா நண்பர்களும் இந்தச் சிறப்பு காட்சியில் கலந்து கொண்டனர்.


தன் திரைக்கதையில் உருவான தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் படங்களுக்கும் இப்படி ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் கமல். அதிலும் திரையுலக நண்பர்கள், இளம் இயக்குனர்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே கருதுகிறார் கமல்.



காமெடி கலந்த கதையில் நடிப்பது என்பது கமலுக்கு ஒன்றும் புதிதில்லை. அதுவும் இவரோடு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துவிட்டால், சொல்லவே வேண்டாம். இவர்கள் காம்பினேஷனில் மீண்டும் வெளிவந்திருக்கிறது மன்மதன் அம்பு. இது ஒரு வியாபார சினிமா என்று கமலே சொல்லிவிட்டார். அதனால் படத்தில் ஆட்டம் பாட்டம் அதிகமாம். தேவி ஸ்ரீ பிரசாத்தின் 'டண்டணக்கா' இசையை கேட்கும் போதே, இதை பல பேர் உணர்ந்திருப்பார்கள். விடுமுறை நாட்களை என்ஜாய் பண்ண சரியான படம் என்றும் மன்மதன் அம்பு படம் பார்த்தவர்கள் பாராட்டுகிறார்கள்.

படத்தில் சூர்யா ஒரு பாடலுக்கு வருகிறார் என்பது படத்தின் இன்னொரு ஹைலைட். படத்துக்கு முக்கியமாக உதவி இருப்பது வசனங்கள் தானாம். அப்படி கிச்சு கிச்சு மூட்டி சிரிப்பை வரவழைக்கிறதாம் வசனங்கள். அதை விட, படத்துக்கு சிறப்பாக உதவியது ஷூட்டிங் செல்வதற்கு முன்பு படத்தில் நடிப்பவர்கள் ஒத்திகை பார்த்ததுதான் என, படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.


சரி படம் பார்த்து ரஜினி என்ன சொன்னார்?... படத்தை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்த ரஜினி. படம் பார்த்து முடிந்து வெளியே வந்தவுடன் கமலைத் கட்டி அனைத்து வாழ்த்தினார். குடும்பத்தோட பார்த்து சிரித்தோம். நல்ல படம் என்று கமலிடம் சொன்னார் ரஜினி.

சிரிக்க மட்டும் இல்லைங்க, சிந்திக்கவும் நிறைய விஷயங்களை படத்தில் வைத்திருக்கிறாராம் கமல்.
Read More

Monday, 20 December 2010

Sudharsan SR

எதிர்ப்பாளர்களுக்கு கமல் பதிலடி

 
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் – த்ரிஷா ஜோடி நடித்திருக்கும் புதிய படம் மன்மதன் அம்பு.
அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், தெனாலி போன்ற படங்களைப் போலவே இந்த படத்திலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற அக்மார்க் உத்தரவாதத்துடன் திரைக்கு வரத் தயாராகியிருக்கும் மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாசன் எழுதிய பாடல் ஒன்று சர்ச்சைக்குள் சிக்கியது.  பெண் ஒருத்தி, வரலட்சுமியிடம் வரம் கேட்கும் விதமாக அந்த பாடல் வரிகளை அமைத்துள்ள கமல்ஹாசன், இந்த பாடலின் மூலம் காமம் முடிந்த பிறகு கரெக்டாக கழுவிக்கொள்ள வேண்டும் என்றும் கற்றுக்கொடுக்கிறார்.
கமல்ஹாசனின் இந்த பாடலுக்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததுடன், பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். பெரிய நிறுவத்தின் தயாரிப்பு…
பெரிய நடிகரின் படம் என்றெல்லாம் பார்க்காமல் கண்டனக் குரல்கள் எழுந்தன. அதேநேரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், மன்மதன் அம்புக்கு யு சான்றிதழ் (சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு ஏற்ற படம்) வழங்கப்பட்டு விட்டது.இந்நிலையில், சர்ச்சைக்குரிய பாடலலை நீக்க முடியாது என்று கமல்ஹாசன் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். கொச்சியில் நடந்த மன்மதன் அம்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பேசினார்.
அப்போது அவர், மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் கூறி வருகின்றன. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில் எந்த காரணத்தைக் கொண்டும் அந்த பாடலை நீக்க முடியாது, என்று கூறினார்.
Read More