Monday, 11 October 2010

Sudharsan SR

எந்திரனின் அபார வசூல்

 

எந்திரன் திரைப்படம் ஒரு வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ.117 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் எந்திரன் திரைப்படம் கடந்த 1-ம் தேதி 
வெளியானது. சுமார் 2 ஆயிரம் தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது.


எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. ஆந்திராவில் ரூ.30 
கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும், வட இந்தியா முழுவதும் ரூ.15 கோடியும் வசூல் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக சல்மான் கான் நடித்த தபாங் திரைப்படம் ஒரு வாரத்தில் ரூ.87 கோடி வசூல் செய்தது தான் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எந்திரன் முறியடித்துள்ளது.

மேலும் தபாங் திரைப்படம் 2 வாரத்தில் ரூ.117 கோடி வசூல் செய்த சாதனையை எந்திரன் படம் ஒரு வாரத்தில் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருப்பதால் பல படங்களின் வசூல் சாதநையை எந்திரன் முறியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.