2011 ம் ஆண்டுக்குள் இரண்டு பெரிய படங்களில் நடித்தாக வேண்டும் நடிகர் விஜய்.
இதிலென்ன விசேஷம் என்றுதானே கேட்கிறீர்கள்...? அந்த இரண்டு படங்களையும் அவர் ஓசியில் நடித்துக் கொடுத்தாக வேண்டும் என்பது விசேஷமான செய்தியில்லையா..!
சுறா படத்தின் படுதோல்விதான் அவரை இப்படி இரண்டு படங்களில் தந்திரமாக சிக்க வைத்துவிட்டதாம்.
இதில் ஒரு படத்தை சுறாவின் ஒரிஜினல் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் தயாரிக்கிறாராம். இன்னொரு படம் சன் பிக்சர்ஸின் சொந்தப் படம்.
சுறா பலமாகக் கையைக் கடிக்கும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து இரு தயாரிப்பாளர்களும் விஜய்யிடம் போட்டுக் கொண்ட ஒப்பந்தமாம் இது. பின்னர் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்ய எஸ்ஏசி எவ்வளவோ முயன்றும் ஒன்றும் நடக்கவில்லை என்பது வேறு கதை!
இதைத்தான், 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்' என்பார்களோ!
Source : http://www.sivajitv.